/உள்ளூர் செய்திகள்/விருதுநகர்/ துாய்மைப் பணிக்கு சவாலாக விளங்கும் பிளாஸ்டிக் பாட்டில்கள் துாய்மைப் பணிக்கு சவாலாக விளங்கும் பிளாஸ்டிக் பாட்டில்கள்
துாய்மைப் பணிக்கு சவாலாக விளங்கும் பிளாஸ்டிக் பாட்டில்கள்
துாய்மைப் பணிக்கு சவாலாக விளங்கும் பிளாஸ்டிக் பாட்டில்கள்
துாய்மைப் பணிக்கு சவாலாக விளங்கும் பிளாஸ்டிக் பாட்டில்கள்
ADDED : மே 28, 2025 07:40 AM
ஸ்ரீவில்லிபுத்துார்: ஸ்ரீவில்லிபுத்துாரில் துாய்மை பணிக்கு பெரும் சவாலாக குளிர்பானம்,மினரல் வாட்டர் காலி பாட்டில்கள், உணவு பார்சல்கள் கழிவுநீர் வாறுகால்களில் வீசப்படுவதால், அதனை அப்புறப்படுத்த துாய்மை பணியாளர்கள் பெரும் சிரமத்தை சந்திக்கின்றனர்.
நகரில் பாலித்தீன் பைகள், மினரல் வாட்டர்கள், குளிர்பானங்கள், பிளாஸ்டிக் கப்புகள் பயன்பாடு அதிகளவில் உள்ளது.
பஜார் வீதிகள் மட்டுமின்றி பல்வேறு தெருக்களிலும் உள்ள பெட்டி கடைகளில் விற்கப்படும் குளிர்பானங்களின் காலிபாட்டில்கள் அப்பகுதியில் உள்ள வாறுகால்களில் வீசப்பட்டு அடைபடுவதால் கழிவு நீர் தேங்கி ரோட்டில் வழியும் நிலை உருவாகிறது.
மேலும் ஓட்டல் உணவு பார்சல்கள் வாங்கி சாப்பிடுபவர்கள், பார்சல் கவர்களை வாறுகால்களில் போட்டு விடுகின்றனர்.
இதுபோல மதுபான கூடங்களில் பயன்படுத்தப்படும் பிளாஸ்டிக் கப்புகள், மினரல் வாட்டர் பாட்டில்கள் வாறுகால்களில் வீசப்படுகிறது.
இதனால் தெருக்கள் முதல் பஜார் வீதிகள் வரை கழிவு நீர் வாறுகால்களில் பிளாஸ்டிக் பாட்டில்கள் அதிகளவில் தேங்குகிறது.
இதனை அப்புறப்படுத்துவதில் நகராட்சி துாய்மை பணியாளர்கள் பெரும் சிரமத்தை சந்திக்கின்றனர்.
அவர்களின் அன்றாட துாய்மை பணிக்கு சவாலாக பிளாஸ்டிக் பாட்டில்கள் விளங்குகிறது.
எனவே, ஒவ்வொரு வீட்டிலும், பஜார் வீதி கடைகளிலும் முறையாக குப்பைத் தொட்டிகளை வைத்து அதில் கழிவுகளை போட்டாலே, தாங்கள் சிரமம் இன்றி எடுத்துச் செல்ல வசதியாக இருக்கும் என துாய்மை பணியாளர்கள் கூறுகின்றனர்.
இதற்கான விழிப்புணர்வை மக்களிடமும், வணிக நிறுவனங்களிடமும் ஏற்படுத்த நகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது சமூக ஆர்வலர்களின் கோரிக்கையாகும்.