/உள்ளூர் செய்திகள்/விருதுநகர்/ திம்மன்பட்டி கண்மாய் கரையில் தடுப்புச் சுவர் கட்ட எதிர்பார்ப்பு திம்மன்பட்டி கண்மாய் கரையில் தடுப்புச் சுவர் கட்ட எதிர்பார்ப்பு
திம்மன்பட்டி கண்மாய் கரையில் தடுப்புச் சுவர் கட்ட எதிர்பார்ப்பு
திம்மன்பட்டி கண்மாய் கரையில் தடுப்புச் சுவர் கட்ட எதிர்பார்ப்பு
திம்மன்பட்டி கண்மாய் கரையில் தடுப்புச் சுவர் கட்ட எதிர்பார்ப்பு
ADDED : மே 28, 2025 07:42 AM
காரியாபட்டி : திம்மன்பட்டி கண்மாய் கரையில் விபத்து அச்சம் உள்ளதால் தடுப்பு சுவர் கட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என வாகன ஓட்டிகள் எதிர்பார்க்கின்றனர்.
மல்லாங்கிணரிலிருந்து திம்மன்பட்டி வழியாக நந்திக்குண்டு வரை 5 கி.மீ., தூரம் ரோடு படுமோசமாக இருந்தது.
குண்டும் குழியுமாக இருந்ததால் வாகனங்கள் சென்றுவர முடியவில்லை. அப்பகுதியில் தொழிற்சாலைக்கு அடிக்கடி வாகனங்கள் சென்று வரும் நிலையில், 5 கி.மீ., தூரத்தை கடக்க படாத பாடுபட்டனர். டூவீலரில் செல்பவர்கள் பெரிதும் சிரமத்திற்கு ஆளாகினர்.
இதனையடுத்து ரூ.3 கோடியே 40 லட்சம் ஒதுக்கீடு செய்யப்பட்டு, சில மாதங்களுக்கு முன் புதிதாக ரோடு போடப்பட்டது. தற்போது வாகனங்கள் தங்கு தடை இன்றி சென்று வருகின்றன.
இந்நிலையில் திம்மன்பட்டியில் ரோடு கண்மாய் கரையில் தடுப்பு சுவர் இல்லாததால் வாகன ஓட்டிகள் விபத்து அச்சத்தில் செல்கின்றனர். இரு வாகனங்கள் விலகிச் செல்ல முடியாது.
விபத்து அச்சத்தால் யார் ஒதுங்கி செல்வது என சண்டையிட வேண்டிய சூழ்நிலை இருந்து வருகிறது.
இரவு நேரங்களில் செல்லும் வாகன ஓட்டிகள் கரை பகுதியை கடக்கும் போது விபத்தில் சிக்க வாய்ப்பு உள்ளது.
இதனை கருத்தில் கொண்டு, விபத்தை தடுக்க 500 மீட்டர் தூரத்திற்கு தடுப்பு சுவர் கட்டி விபத்து அச்சத்தை போக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என வாகன ஓட்டிகள் எதிர்பார்க்கின்றனர்.