/உள்ளூர் செய்திகள்/விருதுநகர்/ திருச்செந்துாரில் கூட்டம் குறைவான நாட்களில்பஞ்சலிங்கத்தை வழிபட அனுமதி: கோர்ட் உத்தரவு * உயர்நீதிமன்றம் உத்தரவு திருச்செந்துாரில் கூட்டம் குறைவான நாட்களில்பஞ்சலிங்கத்தை வழிபட அனுமதி: கோர்ட் உத்தரவு * உயர்நீதிமன்றம் உத்தரவு
திருச்செந்துாரில் கூட்டம் குறைவான நாட்களில்பஞ்சலிங்கத்தை வழிபட அனுமதி: கோர்ட் உத்தரவு * உயர்நீதிமன்றம் உத்தரவு
திருச்செந்துாரில் கூட்டம் குறைவான நாட்களில்பஞ்சலிங்கத்தை வழிபட அனுமதி: கோர்ட் உத்தரவு * உயர்நீதிமன்றம் உத்தரவு
திருச்செந்துாரில் கூட்டம் குறைவான நாட்களில்பஞ்சலிங்கத்தை வழிபட அனுமதி: கோர்ட் உத்தரவு * உயர்நீதிமன்றம் உத்தரவு
ADDED : செப் 23, 2025 05:36 AM
மதுரை: துாத்துக்குடி மாவட்டம் திருச்செந்துார் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் கூட்டம் குறைவாக உள்ள நாட்களில் பஞ்சலிங்கத்தை பக்தர்கள் வழிபட அனுமதிக்க செயல் அலுவலர் முடிவெடுக்க வேண்டும் என உயர்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டது.
திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டையை சேர்ந்த பட்டம் தாக்கல் செய்த பொதுநல மனு:திருச்செந்துார் சுப்பிரமணிய சுவாமி கோயிலிலுள்ள பஞ்சலிங்கங்கள் (ஐந்து லிங்கங்கள்) புராண சிறப்பு மிக்கது. கொரோனா காலகட்டத்தில் பஞ்சலிங்க அறை மூடப்பட்டது. கொரோனா காலகட்டம் முடிந்த பின்னரும் தற்போதுவரை பக்தர்கள் தரிசனம் செய்ய அனுமதி மறுக்கப்படுகிறது. பஞ்சலிங்க மூர்த்திகளுக்கு அபிஷேகம், பூஜைகள் நடைபெறவில்லை. பஞ்சலிங்க அறையைத் திறந்து பக்தர்களை வழிபட அனுமதிக்க வேண்டும். ஆகம விதிகள்படி அபிஷேகம், பிற பூஜைகளை மீண்டும் துவங்க வேண்டும் என அறநிலையத்துறை கமிஷனர், கோயில் செயல் அலுவலருக்கு மனு அனுப்பினேன். நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும். இவ்வாறு குறிப்பிட்டார்.நீதிபதிகள் அனிதா சுமந்த், சி.குமரப்பன் அமர்வு விசாரித்தது. மனுதாரர் தரப்பு வழக்கறிஞர் கிருஷ்ணமூர்த்தி ஆஜரானார்.
கோயில் தரப்பு வழக்கறிஞர் முத்துகீதையன்: பஞ்சலிங்கத்திற்கு நித்ய பூஜைகள் கிடையாது. தினமும் திருவிளக்கு மட்டுமே ஏற்றி வைக்கப்படுகிறது. கோயிலில் பக்தர்கள் கூட்டம் அதிகமாக உள்ளபோது பஞ்சலிங்க தரிசனத்திற்கு அனுமதிப்பதில்லை. கூட்டம் குறைவாக இருக்கும்போது அனுமதிக்கப்படுகிறது.
பஞ்சலிங்கத்திற்கு செல்லும் பாதை குறுகியது. மூத்த குடிமக்களை அனுமதித்தால் மூச்சுத்திணறல் ஏற்பட வாய்ப்புள்ளது. அவர்களை அனுமதிப்பதில்லை. மற்றவர்கள் அனுமதிக்கப்படுகின்றனர் எனக்கூறி பதில் மனு தாக்கல் செய்தார். நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவு: கூட்டம் குறைவாக உள்ள நாட்களில் பஞ்சலிங்க தரிசனத்திற்கு பக்தர்களை அனுமதிப்பது குறித்து கோயில் செயல் அலுவலர் முடிவெடுக்க வேண்டும். வழக்கு முடித்து வைக்கப்படுகிறது என்றனர்.