/உள்ளூர் செய்திகள்/விருதுநகர்/நிற்காமல் செல்லும் பஸ்கள் தவிப்பில் நத்தம்பட்டி மக்கள்நிற்காமல் செல்லும் பஸ்கள் தவிப்பில் நத்தம்பட்டி மக்கள்
நிற்காமல் செல்லும் பஸ்கள் தவிப்பில் நத்தம்பட்டி மக்கள்
நிற்காமல் செல்லும் பஸ்கள் தவிப்பில் நத்தம்பட்டி மக்கள்
நிற்காமல் செல்லும் பஸ்கள் தவிப்பில் நத்தம்பட்டி மக்கள்
ADDED : பிப் 11, 2024 12:33 AM
வத்திராயிருப்பு: தேசிய நெடுஞ்சாலையில் உள்ள தங்கள் ஊரின் வழியாக 10 பஸ்கள் போனால், ஒரு பஸ் மட்டுமே நிற்பதால் நத்தம் பட்டி மக்கள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர்.
சில ஆண்டுகளுக்கு முன்பு வரை மதுரை கொல்லம் தேசிய நெடுஞ்சாலையில் இயங்கும் அனைத்து தொலைதூர பஸ்களும் நின்று சென்று வந்தது. இதனால் கிராம மக்கள் இரவு, பகல் எந்த நேரமும் பயணித்து வந்தனர். ஆனால் சில மாதங்களாக செங்கோட்டை, நாகர்கோவில், திருநெல்வேலி செல்லும் பஸ்கள் நின்று செல்வதில்லை. தேனி, மதுரையில் இருந்து புறப்படும் பஸ்களும் நத்தம்பட்டிக்கு பயணிகளை ஏற்றுவதில்லை.
ராஜபாளையம் செல்லும் பஸ்கள் மட்டுமே நின்று செல்கிறது.
இதனால் தங்கள் ஊரின் வழியாக 10 பஸ்கள் சென்றால் ஒரு பஸ் மட்டுமே நின்று செல்வதால் அவசர நேரத்தில் கிராம மக்கள் நெடுநேரம் காத்துக் கிடக்க வேண்டி உள்ளது.
இதே போல் இரவு 9:00 மணிக்கு மேல் ராஜபாளையம், ஸ்ரீவில்லிபுத்தூரிலிருந்து நத்தம் பட்டி வரவேண்டுமெனில் பெரும்பாலான பஸ்கள் நிற்பதில்லை. இது அப்பகுதி மக்களுக்கு மேலும் சிரமத்தை ஏற்படுத்துகிறது.
எனவே, நத்தம்பட்டியில் அனைத்து பஸ்களும் நின்று செல்வதை அரசு போக்குவரத்து கழகமும், வட்டார போக்குவரத்து துறை அலுவலகமும், மாவட்ட நிர்வாகமும் உறுதி செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும்.