/உள்ளூர் செய்திகள்/விருதுநகர்/ மெயின் ரோட்டில் வத்திராயிருப்பு நீதிமன்றத்திற்கு சொந்த கட்டடம் மக்கள் எதிர்பார்ப்பு மெயின் ரோட்டில் வத்திராயிருப்பு நீதிமன்றத்திற்கு சொந்த கட்டடம் மக்கள் எதிர்பார்ப்பு
மெயின் ரோட்டில் வத்திராயிருப்பு நீதிமன்றத்திற்கு சொந்த கட்டடம் மக்கள் எதிர்பார்ப்பு
மெயின் ரோட்டில் வத்திராயிருப்பு நீதிமன்றத்திற்கு சொந்த கட்டடம் மக்கள் எதிர்பார்ப்பு
மெயின் ரோட்டில் வத்திராயிருப்பு நீதிமன்றத்திற்கு சொந்த கட்டடம் மக்கள் எதிர்பார்ப்பு
ADDED : ஜூன் 13, 2025 02:37 AM
வத்திராயிருப்பு: வத்திராயிருப்பில் இருந்து கிருஷ்ணன்கோவில் செல்லும் மெயின் ரோட்டில் நீதிமன்றத்திற்கு சொந்த கட்டடம் கட்டப்பட வேண்டும் என மக்கள் எதிர்பார்க்கின்றனர்.
2024ல் வத்திராயிருப்பு தாலுகாவிற்கு நீதிமன்றம் துவக்கப்பட்டது. தற்போது பழைய ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் தற்காலிகமாக செயல்பட்டு வருகிறது.
கூமாபட்டி, வத்திராயிருப்பு, நத்தம்பட்டி போலீஸ் ஸ்டேஷன்களில் பதிவாகும் வழக்குகள் இங்கு விசாரிக்கப்பட்டு வருகிறது. இதற்காக தினமும் நீதிமன்றத்திற்கு பலர் வந்து செல்கின்றனர்.
இவர்கள் முத்தாலம்மன் பஜார், நாடார் பஜார், பஸ் ஸ்டாண்ட் ஆகிய இடங்களில் இறங்கி நடந்து செல்ல வேண்டி உள்ளது அல்லது ஆட்டோ பிடித்து தான் பயணிக்க வேண்டியுள்ளது. மேலும் நீதிமன்றம் செயல்பாட்டுக்கு வந்த சில நாட்களிலேயே, முகப்பில் இருந்த போர்டு சேதப்படுத்தப்பட்ட சம்பவத்தில் வத்திராயிருப்பு போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். இது நீதிமன்றத்தின் பாதுகாப்பை கேள்விக்குறியாக்கி உள்ளது.
எனவே வத்திராயிருப்பில் இருந்து கிருஷ்ணன்கோவில் செல்லும் மெயின் ரோட்டில் நீதிமன்றத்திற்கு சொந்த கட்டடம் கட்டப்பட்டால் தான் அனைத்து பகுதிகளை சேர்ந்த மக்களும் சிரமமின்றி வந்து செல்ல முடியும்.