/உள்ளூர் செய்திகள்/விருதுநகர்/ காரியாபட்டி பட்டாசு ஆலை விபத்தில் மேலும் ஒருவர் பலி காரியாபட்டி பட்டாசு ஆலை விபத்தில் மேலும் ஒருவர் பலி
காரியாபட்டி பட்டாசு ஆலை விபத்தில் மேலும் ஒருவர் பலி
காரியாபட்டி பட்டாசு ஆலை விபத்தில் மேலும் ஒருவர் பலி
காரியாபட்டி பட்டாசு ஆலை விபத்தில் மேலும் ஒருவர் பலி
ADDED : ஜூன் 13, 2025 01:52 AM

காரியாபட்டி:விருதுநகர் மாவட்டம் காரியாபட்டி வடகரையில் நடந்த பட்டாசு ஆலை விபத்தில் 3 பேர் இறந்த நிலையில், நேற்று சிகிச்சை பலனின்றி பேச்சியம்மாள் உயிரிழந்தார்.
காரியாபட்டி வடகரையில் பேன்சி ரக தயாரிப்பு பட்டாசு ஆலையில் நேற்று முன்தினம் வெடி விபத்து ஏற்பட்டது. இதில் அறை கட்டடம் முற்றிலும் சேதம் அடைந்து தரைமட்டமானது. அதில் பணிபுரிந்த கருப்பையா, சவுண்டம்மாள் சம்பவ இடத்தில் பலியாகினர். மருத்துவமனையில் கணேசன் பலியானார். படுகாயம் அடைந்த முருகன், இவரது மனைவி பேச்சியம்மாள் விருதுநகர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தனர். நேற்று சிகிச்சை பலனின்றி பேச்சியம்மாள் உயிரிழந்தார். பட்டாசு வெடி விபத்தில் பலி எண்ணிக்கை 4 ஆக உயர்ந்தது.