ADDED : அக் 19, 2025 05:50 AM
விருதுநகர்: விருதுநகர் மாவட்ட அரசு ஓய்வூதியர் சங்க கூட்டம் மாவட்ட தலைவர் கணேசன் தலைமையில் நடந்தது.
70வயது நிரம்பிய ஓய்வூதியர்களுக்கு 10 சதவீத ஓய்வூதியம் உயர்வு, பழைய ஓய்வூதியம் அமல் உட்பட பல்வேறு தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்ற வலியுறுத்தி அக்.24ல் கலெக்டர் அலுவலகத்தில் ஆர்ப்பாட்டம், அக்.29ல் அமைச்சர்கள், எம்.எல்.ஏ.,க்கள் சந்திப்பு, நவ.21ல் சென்னையில் ஆர்ப்பாட்டம் நடத்த தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. மாவட்ட செயலர் மனோகரன், துணை தலைவர் சுப்புராம், ராமசுப்பு உள்பட பலர் பங்கேற்றனர்.


