/உள்ளூர் செய்திகள்/விருதுநகர்/ அதிகாரிகளின் அரசு அலைபேசி எண்கள் 'சுவிட்ச் ஆப்'; தொடர்பு கொள்ள முடியாமல் மக்கள் தவிப்பு அதிகாரிகளின் அரசு அலைபேசி எண்கள் 'சுவிட்ச் ஆப்'; தொடர்பு கொள்ள முடியாமல் மக்கள் தவிப்பு
அதிகாரிகளின் அரசு அலைபேசி எண்கள் 'சுவிட்ச் ஆப்'; தொடர்பு கொள்ள முடியாமல் மக்கள் தவிப்பு
அதிகாரிகளின் அரசு அலைபேசி எண்கள் 'சுவிட்ச் ஆப்'; தொடர்பு கொள்ள முடியாமல் மக்கள் தவிப்பு
அதிகாரிகளின் அரசு அலைபேசி எண்கள் 'சுவிட்ச் ஆப்'; தொடர்பு கொள்ள முடியாமல் மக்கள் தவிப்பு
ADDED : மார் 23, 2025 06:59 AM
மக்களுடன் நேரடி தொடர்புடைய போலீஸ், வருவாய், பொதுப்பணித்துறை, உள்ளாட்சி, வேளாண்மை, சுகாதாரம், சமூக நலம், கால்நடை, கைத்தறி, போக்குவரத்து உட்பட 80 அரசுத்துறை பிரிவுகள் செயல்பட்டு வருகிறது.
இத்தகைய துறைகளின் அதிகாரிகளை மக்கள் தொடர்பு கொள்ள வசதியாக போலீஸ், நகராட்சி கமிஷனர்கள், பேரூராட்சி செயல் அலுவலர்கள், ஊராட்சி ஒன்றியங்களில் பி.டி.ஓ., ஊராட்சி செயலர்கள், பள்ளிக்கல்வித்துறையில் கல்வி அலுவலர்கள், போக்குவரத்து துறையில் டிப்போ மேனேஜர் முதல் பொது மேலாளர் வரை, அரசு மருத்துவமனை தலைமை மருத்துவர்கள் உட்பட பல்வேறு துறையினருக்கு அரசின் சார்பில் அலைபேசி எண்கள் வழங்கப்பட்டுள்ளது.
இந்த அலைபேசி எண்களை தொடர்பு கொண்டு தங்கள் குறைகளுக்கு தீர்வு காண பயன்படுத்தும்படி மக்களுக்கும், பயன்படுத்தும் அலுவலருக்கும் அரசு நிர்வாகம் அறிவுறுத்தியுள்ளது. இதில் பெரும்பாலான அரசு அலுவலர்கள் ஏற்கனவே தங்கள் சொந்த உபயோகத்திற்கு இரண்டு அலைபேசி எண்களை வைத்துள்ள நிலையில், அரசு கொடுத்த அலைபேசி எண்ணை பயன்படுத்தாமல் மாதம்தோறும் 'ரீசார்ஜ்' செய்யாமலும், சுவிட்ச் ஆப் செய்தும் வைத்துள்ளனர்.
ஊராட்சி செயலாளர்களில் பெரும்பாலானோர் இந்த அரசு அலைபேசி எண்களை பயன்படுத்துவதே கிடையாது. அலைபேசியில் பதிவு செய்யப்படாத பிற எண்களில் இருந்து அழைப்பு வந்தால் பல பி.டி.ஓ.க்கள் அதனை எடுத்து பேசுவது கிடையாது. பல நேரங்களில் சுவிட்ச் ஆப் செய்து விடுகின்றனர். சில நகராட்சி கமிஷனர்கள், பேரூராட்சி செயல் அலுவலர்களின் அலைபேசி எண்களும் இதே நிலையில் தான் உள்ளன.
வருவாய்த் துறையில் பெரும்பாலான வி.ஏ.ஓக்கள், அரசு அலைபேசி எண்ணை பயன்படுத்துவதில்லை. பல அதிகாரிகள் அரசு வழங்கிய அலைபேசி எண்ணை பயன்படுத்துவதில் அலட்சிய போக்குடன் உள்ளனர்.
எனவே மாவட்டத்தில் ஒவ்வொரு அரசு துறையிலும் உள்ள அதிகாரிகளுக்கு அரசு வழங்கிய அலைபேசி எண்கள் தினமும் 24 மணி நேரமும் செயல்பாட்டில் உள்ளதா, அதனை சம்பந்தப்பட்ட அதிகாரிகள் சரிவர பயன்படுத்துகிறார்களா என கலெக்டரே, தனது அலைபேசி எண்ணில் இருந்து தொடர்பு கொண்டு பேச வேண்டும். அப்போது தான் அனைத்து அதிகாரிகளின் செயல்பாடும் தெரிய வரும். அலைபேசி எண்களை முழுமையாக பயன்படுத்த கலெக்டர் அறிவுறுத்த வேண்டும்.