/உள்ளூர் செய்திகள்/விருதுநகர்/ரோடு வசதி இல்லை, திறந்தவெளியில் அவலம்ரோடு வசதி இல்லை, திறந்தவெளியில் அவலம்
ரோடு வசதி இல்லை, திறந்தவெளியில் அவலம்
ரோடு வசதி இல்லை, திறந்தவெளியில் அவலம்
ரோடு வசதி இல்லை, திறந்தவெளியில் அவலம்
திறந்த வெளி அவலம்
பீமா, குடியிருப்பாளர்: அடித்தட்டு மக்கள் அதிகம் உள்ளதால் தனிநபர் கழிப்பறை வசதி இல்லை. இதனால் சஞ்சீவி மலை அடிவாரம், ரயில்வே தண்டவாள பகுதிகளை திறந்த வெளியாக பயன்படுத்துகிறோம். சமூக விரோதிகள், விஷ பூச்சிகளின் தொல்லைக்கு ஆளாகிறோம்.
--குடிநீருக்கு அல்லல்
பிரேமா, குடியிருப்பாளர்: குடிநீர் இணைப்பு வசதி இல்லாததால் நகராட்சி தண்ணீர் லாரிகளையே நம்பி உள்ளோம். 15 நாட்களுக்கு ஒரு முறை சப்ளை இருப்பதால் குடிநீருக்கு அல்லல் ஏற்படுவதோடு புழக்கத்திற்கான நீரையும் அருகாமை பகுதிகளுக்கு தேடிச் செல்ல வேண்டி உள்ளது.
ரோ டு வசதி இல்லை
ஸ்டாலின், குடியிருப்பாளர்: ரயில்வே கேட் பகுதியில் இருந்து எம்.ஜிஆர் நகர் முதலாவது குடியிருப்பு வரை முறையான ரோடு வசதி இல்லை. பாதி பகுதியில் ரயில்வே நிர்வாகத்திற்கான இடமாக இருந்தாலும் ஒப்பந்த அடிப்படையில் மண் ரோடு அல்லது பராமரிப்பு செய்து தர வேண்டும்.
புறக்கணிப்பில் உள்ளோம்
சோலைமலை, கவுன்சிலர்: அடிப்படை வசதிக்காக நகராட்சி கூட்டங்களில் தொடர்ந்து முறையிட்டும் எதிர்க்கட்சி உறுப்பினர் என்ற வகையில் புறக்கணிப்பு ஏற்படுகிறது.