/உள்ளூர் செய்திகள்/விருதுநகர்/நகராட்சி, வருவாய் துறை இடங்களை மீட்பதில் அலட்சியம்; கையகப்படுத்துவதில் அதிகாரிகள் சுணக்கமும் நகராட்சி, வருவாய் துறை இடங்களை மீட்பதில் அலட்சியம்; கையகப்படுத்துவதில் அதிகாரிகள் சுணக்கமும்
நகராட்சி, வருவாய் துறை இடங்களை மீட்பதில் அலட்சியம்; கையகப்படுத்துவதில் அதிகாரிகள் சுணக்கமும்
நகராட்சி, வருவாய் துறை இடங்களை மீட்பதில் அலட்சியம்; கையகப்படுத்துவதில் அதிகாரிகள் சுணக்கமும்
நகராட்சி, வருவாய் துறை இடங்களை மீட்பதில் அலட்சியம்; கையகப்படுத்துவதில் அதிகாரிகள் சுணக்கமும்
ADDED : ஜூன் 11, 2025 07:11 AM

அருப்புக்கோட்டை: நகராட்சி, வருவாய் துறைகளுக்கு சொந்தமான பல கோடி ரூபாய் மதிப்புள்ள இடங்கள் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டுள்ளதை அதிகாரிகள் கையகப்படுத்துவதில் அலட்சியம் காட்டுகின்றனர்.
அருப்புக்கோட்டையில் நகராட்சி, வருவாய் துறைக்கு சொந்தமான இடங்கள் சொக்கலிங்கபுரம், பட்டாபிராமர் கோயில் பகுதி, புளியம்பட்டி, மதுரை ரோடு, ரயில்வே பீடர் ரோடு உள்ளிட்ட பகுதிகளில் உள்ளது. இது தவிர நகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் உருவாகும் புறநகர் பகுதிகளில் பிளாட் போட்டு விற்பவர்கள் நகராட்சியின் பொது பயன்பாட்டிற்கு என தனியாக இடங்களும் ஒதுக்கப்பட்டுள்ளது. இது தவிர நகராட்சியில் பூங்காவிற்கு என பல பகுதிகளில் இடம் உள்ளது.
அருப்புக்கோட்டை நேதாஜி நகர் விரிவாக்க பகுதியில் பூங்காவிற்கு என நகராட்சிக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. இடம் ஒதுக்கப்பட்டு 30 ஆண்டுகளுக்கு மேலாகியும் இங்கு பூங்கா அமைக்க நகராட்சி எந்த நடவடிக்கை எடுக்கவில்லை. நகராட்சி இடம் என்ற அறிவிப்பு பலகையும் இல்லை. இதனால் இந்த இடம் தனியார்களின் ஆக்கிரமிப்பு செய்ய நேரிடுகிறது. இதேபோன்று பட்டாபிராமர் கோவில் பகுதியில் வருவாய் துறைக்கு சொந்தமான இடம் உள்ளது. இவையும் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டுள்ளது. இது போன்ற இடங்கள் தனியாரால் பல ஆண்டுகளாக ஆக்கிரமிப்புகள் செய்யப்பட்டு விடுகின்றன. தெற்கு தெரு பகுதியில் பல ஆண்டுகளாக கோடி ரூபாய் மதிப்பில் உள்ள நகராட்சி இடம் அந்தப் பகுதி கவுன்சிலர் தொடர்ந்து போராடியதில், நகராட்சி இடத்தை கையகப்படுத்தியுள்ளது.
நகராட்சியில் உள்ள நகரமைப்பு பிரிவு நகராட்சிக்கு சொந்தமான இடங்களை அடையாளம் கண்டு அதற்கான அறிவிப்பு பலகையை வைப்பது இல்லை.இதனால் நகராட்சிக்கு தெரியாமலேயே நகராட்சி இடங்கள் ஆக்கிரமிப்பு செய்யப்படுகிறது. ஆக்கிரமிப்பு செய்யப்பட்டு இருப்பது தெரிந்தும் நகர் அமைப்பு அதிகாரிகள் அகற்றுவதற்குரிய நடவடிக்கை எடுப்பதும் இல்லை அதை கண்டு கொள்வதும் இல்லை.
ஆண்டு கணக்கில் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டு விடுவதால் இதை அகற்றுவதற்கு கோர்ட் மூலம் நடவடிக்கை எடுக்க வேண்டி உள்ளது.
நகராட்சியின் நகர அமைப்பு அலுவலர்கள் ஆக்கிரமிப்பு செய்யப்பட்ட பகுதிகளை சர்வே செய்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். அலட்சியம் காட்டுவதால் கோடிக்கணக்கான மதிப்புள்ள அரசு நிலங்கள் தனியார் வசம் ஆகி உள்ளன. இவற்றை அடையாளம் கண்டு ஆக்கிரமிப்புகளை அகற்ற மாவட்ட நிர்வாகம் தான் நடவடிக்கை எடுக்க வேண்டும்.