/உள்ளூர் செய்திகள்/விருதுநகர்/மத்திய அரசின் காப்பீடு திட்டம் குறித்து தேவை விழிப்புணர்வு! வழிமுறை தெரியாமல் மக்கள் தவிப்பு மத்திய அரசின் காப்பீடு திட்டம் குறித்து தேவை விழிப்புணர்வு! வழிமுறை தெரியாமல் மக்கள் தவிப்பு
மத்திய அரசின் காப்பீடு திட்டம் குறித்து தேவை விழிப்புணர்வு! வழிமுறை தெரியாமல் மக்கள் தவிப்பு
மத்திய அரசின் காப்பீடு திட்டம் குறித்து தேவை விழிப்புணர்வு! வழிமுறை தெரியாமல் மக்கள் தவிப்பு
மத்திய அரசின் காப்பீடு திட்டம் குறித்து தேவை விழிப்புணர்வு! வழிமுறை தெரியாமல் மக்கள் தவிப்பு
ADDED : ஜூன் 25, 2024 12:06 AM

விருதுநகர் மாவட்டத்தில், தினக்கூலி தொழிலாளர்கள், ஏழை, எளிய மக்கள் அதிகம் உள்ளனர். விபத்து ஏற்பட்டு குடும்பத் தலைவர் இறப்பு நேரங்களில் இக்கட்டான சூழ்நிலைக்கு தள்ளப்படுகின்றனர். அதுபோன்ற நிலைமையில் அக்குடும்பம் பொருளாதாரத்தில் பின்தங்கி தவிப்பதோடு, சோர்ந்து போகும் நிலை ஏற்படுகிறது. இதை தடுக்கும் வகையில் மத்திய அரசு பிரதம மந்திரி பாதுகாப்பு காப்பீட்டு திட்டம் உள்ளிட்ட பல்வேறு திட்டங்களை ஏற்படுத்தி, எளிய முறையில் தவணை செலுத்திக் கொள்ள வழி செய்துள்ளது.
பிரதம மந்திரி பாதுகாப்பு காப்பீட்டு திட்டத்தில் ஆண்டுக்கு ரூ. 20விபத்து காப்பீட்டு திட்டமும், ரூ. 436 க்கு ஆயுள் காப்பீட்டு திட்டமும் உள்ளது. ஒவ்வொரு ஆண்டும் வங்கி கணக்கில் இருந்து காப்பீட்டு தொகை எடுத்துக் கொள்ள வகை செய்யப்பட்டுள்ளது.
18 வயது முதல் 70 வயது வரை விபத்து காப்பீட்டு திட்டத்திலும், 18 வயது முதல் 55 வயது வரை ஆயுள் காப்பீட்டு திட்டத்திலும் தொடர முடியும். இத்திட்டங்கள் குறித்து கிராமங்களில் விழிப்புணர்வு கிடையாது. அவ்வாறு இருந்தாலும் வழிமுறைகள் தெரியாததால் யாரும் விண்ணப்பிக்க முன் வருவதில்லை.
இக்கட்டான நிலைமையில் இருக்கும் போது தான் இன்சூரன்ஸ் போடாதது குறித்து பலருக்கும் கவலை ஏற்படுகிறது. இதனை கருத்தில் கொண்டு ஏழை எளிய மக்கள் பயன்பெற வேண்டி பிரதம மந்திரியின் சேமிக்கும் திட்டங்கள் கொண்டுவரப்பட்டன. இதில் அனைத்து தரப்பு மக்களும் பயன்பெறலாம்.
அதிகாரிகள் ஒவ்வொரு கிராமப் பகுதிகளுக்கும் சென்று ஏழை, எளிய மக்கள், கூலி தொழிலாளர்களிடம் இத்திட்டங்களின் நன்மைகள் குறித்து தேவையான விழிப்புணர்வுகளை ஏற்படுத்த வேண்டும். எளிதில் மக்களைச் சென்றடைய கலைக்குழுக்கள் மூலம் தேவையான விழிப்புணர்வுகளை ஏற்படுத்தி, இத்திட்டங்களில் மக்களை சேர்க்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.