ADDED : ஜூன் 25, 2024 12:07 AM
திருச்சுழி : திருச்சுழி அருகே கிராம வேளாண்மை முன்னேற்ற குழுவிற்கான பயிற்சி நடந்தது.
அரசு வேளாண்துறை சார்பில் வேளாண்மை வளர்ச்சி திட்டத்தின் கீழ் தேர்வு செய்யப்பட்ட குலசேகரநல்லூர், தும்முசின்னம்பட்டி, ராஜகோபாலபுரம், தமிழ்பாடி உட்பட கிராமங்களில் வேளாண்மை முன்னேற்ற குழுவிற்கான பயிற்சி நடந்தது. வேளாண் துறை, பிற துறை அதிகாரிகள் பயிற்சி அளித்தனர்.
திருச்சுழி வேளாண்மை உதவி இயக்குனர் குமரன் தலைமை, துணை வேளாண்மை அலுவலர் கணேசன், வட்டார தொழில்நுட்ப மேலாளர் பிரேமா விளக்கினார்.
ஏற்பாடுகளை உதவி தொழில்நுட்ப மேலாளர் முத்துராஜ், உதவி வேளாண்மை அலுவலர் சந்திரசேகர் செய்தனர்.