/உள்ளூர் செய்திகள்/விருதுநகர்/ தந்தையிடம் தகராறு செய்தவர் கொலை: மகன் போலீசில் சரண் மகன் போலீசில் சரண் தந்தையிடம் தகராறு செய்தவர் கொலை: மகன் போலீசில் சரண் மகன் போலீசில் சரண்
தந்தையிடம் தகராறு செய்தவர் கொலை: மகன் போலீசில் சரண் மகன் போலீசில் சரண்
தந்தையிடம் தகராறு செய்தவர் கொலை: மகன் போலீசில் சரண் மகன் போலீசில் சரண்
தந்தையிடம் தகராறு செய்தவர் கொலை: மகன் போலீசில் சரண் மகன் போலீசில் சரண்
ADDED : ஜூன் 25, 2025 02:57 AM

அருப்புக்கோட்டை,:விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டையில் தந்தையிடம் தகராறு செய்தவரை மகன் கத்தியால் குத்தி கொலை செய்துவிட்டு போலீஸ் ஸ்டேஷனில் சரணடைந்தார்.
அருப்புக்கோட்டை அண்ணா நகர் 4வது தெருவை சேர்ந்தவர் நாகராஜன் 55. பெயின்டராக உள்ளார். நேற்று காலை 8:00 மணிக்கு, இவருடன் வேலை பார்த்த மேலகண்டமங்கலம் வடக்கு தெருவை சேர்ந்த முத்துக்குமார் 56, வீட்டிற்கு வந்து பேசிக் கொண்டிருந்தார். இருவருக்கும் தொழில் பிரச்னை காரணமாக தகராறு ஏற்பட்டது.
இதில் முத்துக்குமார் நாகராஜனை கத்தியால் குத்த முயன்றுள்ளார். இதை பார்த்து கொண்டிருந்த நாகராஜன் மகன் விக்னேஷ் 21, முத்துக்குமாரிடம் இருந்து கத்தியை பறித்து அவரை குத்திக்கொலை செய்தார்.
பின் அவர் கத்தியுடன் அருப்புக்கோட்டை போலீஸ் ஸ்டேஷனிற்கு சென்று சரணடைந்தார்.
எஸ்.பி., கண்ணன் சம்பவ இடத்தை பார்வையிட்டார். ஏ.டி.எஸ்.பி., மதிவாணன், போலீசார் விசாரிக்கின்றனர்.