/உள்ளூர் செய்திகள்/விருதுநகர்/ரோட்டின் நடுவே மின்கம்பம் விபத்தில் சிக்கும் வாகன ஓட்டிகள்ரோட்டின் நடுவே மின்கம்பம் விபத்தில் சிக்கும் வாகன ஓட்டிகள்
ரோட்டின் நடுவே மின்கம்பம் விபத்தில் சிக்கும் வாகன ஓட்டிகள்
ரோட்டின் நடுவே மின்கம்பம் விபத்தில் சிக்கும் வாகன ஓட்டிகள்
ரோட்டின் நடுவே மின்கம்பம் விபத்தில் சிக்கும் வாகன ஓட்டிகள்
ADDED : பிப் 12, 2024 04:32 AM

ராஜபாளையம்: ராஜபாளையம் பி.எஸ்.கே., ரோட்டின் நடுவே உள்ள மின்கம்பத்தால் வாகன ஓட்டிகள் விபத்தில் சிக்கி வருகின்றனர். இடையூறின்றி ரோட்டோரம் மாற்றியமைக்க பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
ராஜபாளையம் நகரின் வடக்கு பகுதியை வடக்கு பகுதியை சேர்ந்த மக்கள் சத்திரப்பட்டி, சமுசிகாபுரம், அட்டைமில் பகுதிகளுக்கான லாரி, பஸ் உள்ளிட்ட கனரக வாகனங்கள் மலையடிப்பட்டி மெயின் ரோட்டை கடந்து செல்ல வேண்டி உள்ளது.
இதற்கு மாற்று பாதையாக ரயில்வே ஸ்டேஷனை ஒட்டிய பி.எஸ்.கே.,ரோடு நெரிசலின்றி உபயோகத்தில் இருந்து வந்தது. இந்நிலையில் இந்த ரோட்டின் நடுவில் அமைந்துள்ள மின்கம்பம் இப்பகுதியை கடந்து செல்வோருக்கு இடையூறாக உள்ளது. புதிதாக இரவு நேரங்களில் இப்பகுதியை கடப்போர் திடீரென எதிர்கொள்ளும் மின் கம்பத்தில் மோதி விபத்துக்கு உள்ளாகி வருகின்றனர்.
அத்துடன் ரோட்டின் ஒரு பகுதியில் ரயில்வே ஸ்டேஷன் காம்பவுண்ட் சுவர் அமைக்கப்பட்டு விட்டதால் சாலை மேலும் நெருக்குதலுக்கு உள்ளாகி விட்டது. தற்போது இதன் அருகிலேயே ரயில்வே ஸ்டேஷன் நுழைவு பகுதி கேட் அமைய உள்ள நிலையில் ரயிலில் நெல் லோடு ஏற்றி செல்ல வரும் லாரிகள் இடைஞ்சலை சந்திக்க நேரிடும். எனவே மின்கம்பத்தை ரோட்டோரம் மாற்றி அமைக்க வேண்டும் என்பது இப்பகுதியினரின் எதிர்பார்ப்பு.