/உள்ளூர் செய்திகள்/விருதுநகர்/ அ.தி.மு.க., மாஜி கவுன்சிலரை கைது செய்ய வலியுறுத்தி ம.தி.மு.க., எம்.எல்.ஏ., தர்ணா அ.தி.மு.க., மாஜி கவுன்சிலரை கைது செய்ய வலியுறுத்தி ம.தி.மு.க., எம்.எல்.ஏ., தர்ணா
அ.தி.மு.க., மாஜி கவுன்சிலரை கைது செய்ய வலியுறுத்தி ம.தி.மு.க., எம்.எல்.ஏ., தர்ணா
அ.தி.மு.க., மாஜி கவுன்சிலரை கைது செய்ய வலியுறுத்தி ம.தி.மு.க., எம்.எல்.ஏ., தர்ணா
அ.தி.மு.க., மாஜி கவுன்சிலரை கைது செய்ய வலியுறுத்தி ம.தி.மு.க., எம்.எல்.ஏ., தர்ணா
ADDED : ஜூலை 02, 2025 07:59 AM

சாத்துார்; அ.தி.மு.க., முன்னாள் ஊராட்சி ஒன்றிய கவுன்சிலர் அடைக்கலத்தை கைது செய்ய வலியுறுத்தி சாத்துார் டி.எஸ்.பி அலுவலகத்தில் ம.தி.மு.க.,எம்.எல்.ஏ., ரகுராமன் கட்சியினருடன் தர்ணாவில் ஈடுபட்டார்.
வெம்பக்கோட்டை விஜயகரிசல்குளத்தில்புதிய ஊராட்சி அலுவலகம் கட்டுவதற்கான அடிக்கல் நாட்டு விழா நேற்று முன்தினம் நடந்தது. ரகுராமன் எம். எல். ஏ ., பங்கேற்ற போது வெம்பக்கோட்டை ஊராட்சி ஒன்றிய அ.தி.மு.க. முன்னாள் கவுன்சிலர் அடைக்கலம் எம். எல். ஏ. காரை வழி மறித்து என்னை மீறி இங்கு கட்டடம் கட்டி விடுவாயா என கொலை மிரட்டல் விடுத்தார்.
இது குறித்து எம்.எல்.ஏ., கொடுத்த புகார் மீது இன்ஸ்பெக்டர் நம்பிராஜன் நடவடிக்கை எடுக்காமல் இருந்துள்ளார்.
இதை கண்டித்து நேற்று மாலை 5:30 மணிக்கு ரகுராமன் எம்.எல்.ஏ., தனது கட்சி நிர்வாகிகளுடன் டி.எஸ்.பி., அலுவலகத்திற்கு வந்து தரையில் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார்.
போலீசார் தாங்கள் அளித்த புகாரின் படி எப்.ஐ.ஆர் பதிவு செய்துள்ளதாகவும் தெரிவித்தனர். இதை ஏற்க மறுத்து தொடர்ந்து எம்.எல்.ஏ., தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார்.
அமைச்சர் சாத்துார் ராமச்சந்திரன் அலைபேசியில் எம்.எல்.ஏ.,விடம் பேசியதை தொடர்ந்து சமரசம் அடைந்த அவர் அங்கிருந்து சென்றார்.
ரகுராமன் எம். எல். ஏ ., கூறியதாவது:விஜய கரிசல் குளம் மக்களின் கோரிக்கையை ஏற்று அங்கு புதிய ஊராட்சி அலுவலகம் கட்டுவதற்கான அடிக்கல் நாட்டு விழா நேற்று நடந்தது. அடிக்கல் நாட்டு விழாவிற்கு நான் சென்ற போது அங்கு என்னை மிரட்டிய அடைக்கலத்தை கைது செய்வதோடு உண்மைக்கு மாறாக நான் கொடுத்த புகார் தவறு என ஸ்டேட்மெண்ட் கொடுத்த இன்ஸ்பெக்டர் நம்பிராஜனையும் இடமாற்றம் செய்ய வேண்டும். என்றார். இந்த நிலையில் நேற்று விஜய கரிசல் குளத்தை சேர்ந்த மக்கள் வெம்பக்கோட்டை ஊராட்சி ஒன்றிய அலுவலத்திலும் போலீஸ் ஸ்டேஷனிலும் எம்.எல்.ஏ., தவறான புகார் அளித்திருப்பதாக மனு அளித்தனர்.