/உள்ளூர் செய்திகள்/விருதுநகர்/ கனிம வாகனங்களில் ஜி.பி.எஸ்., கருவி பொருத்துவது கட்டாயம் ; ஜூலை 31 வரை காலக்கெடு கனிம வாகனங்களில் ஜி.பி.எஸ்., கருவி பொருத்துவது கட்டாயம் ; ஜூலை 31 வரை காலக்கெடு
கனிம வாகனங்களில் ஜி.பி.எஸ்., கருவி பொருத்துவது கட்டாயம் ; ஜூலை 31 வரை காலக்கெடு
கனிம வாகனங்களில் ஜி.பி.எஸ்., கருவி பொருத்துவது கட்டாயம் ; ஜூலை 31 வரை காலக்கெடு
கனிம வாகனங்களில் ஜி.பி.எஸ்., கருவி பொருத்துவது கட்டாயம் ; ஜூலை 31 வரை காலக்கெடு
ADDED : ஜூலை 02, 2025 08:00 AM
விருதுநகர்; மதுரை மண்டலத்திற்குட்பட்ட மாவட்டங்களில் கனிமங்களை கொண்டு செல்லும் வாகனங்களில் ஜி.பி.எஸ்., கருவியை ஜூலை 31க்குள் கட்டாயம் பொருத்த வேண்டும், என மதுரை மண்டல இணை இயக்குனர் சட்டநாதன் தெரிவித்தார்.
மதுரை மண்டலத்திற்குட்பட்ட மதுரை, தேனி, திண்டுக்கல், ராமநாதபுரம், சிவகங்கை, விருதுநகர், திருநெல்வேலி, தென்காசி, துாத்துக்குடி, கன்னியாகுமரியில் உள்ள கல்குவாரிகள், கனிம சேமிப்பு கிடங்குகளில் இருந்து கனிமங்களை கொண்டு செல்லும் வாகனங்களில் ஜூலை 31க்குள் ஜி.பி.எஸ்., கருவி கட்டாயம் பொருத்துவது தொடர்பான ஆலோசனைக்கூட்டம் மதுரை மண்டல இணை இயக்குனர் சட்டநாதன் தலைமையில் விருதுநகரில் நடந்தது.
மேலும் மதுரை மண்டலத்திற்குட்பட்ட அனைத்து குவாரிகள், கிரஷர்கள், சேமிப்பு கிடங்குகளில் கட்டாயமாக எடைமேடை நிறுவ வேண்டும் என தெரிவிக்கப்பட்டது. இதில் புவியியல், சுரங்கத்துறை உதவி இயக்குனர் சுகதாரஹிமா, மதுரை மண்டலத்தில் உள்ள அனைத்து துணை இயக்குனர்கள், உதவி இயக்குனர்கள், மாவட்ட கல்குவாரி உரிமையாளர்கள், கனிம சேமிப்பு கிடங்கு உரிமையாளர்கள் உட்பட பலர் பங்கேற்றனர்.