ADDED : ஜன 11, 2024 05:16 AM
விருதுநகர் : விருதுநகர் - சிவகாசி ரயில்வே இருப்பு பாதையில் பராமரிப்பு பணிகள் செய்ய இருப்பதால், இன்று(ஜன. 11) மட்டும் சாத்துார் ரோடு வழித்தடம் மூடப்படுவதாக ரயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது.
விருதுநகர் - சாத்துார் நெடுஞ்சாலையை இணைக்கும் ரோட்டில் புது பஸ் ஸ்டாண்ட் அருகில் உள்ள லெவல் கிராஸிங் கேட்டின் ரயில்வே இருப்பு பாதையில் இன்று காலை 8:00 மணி முதல் மாலை 6:00 மணி வரை பராமரிப்பு பணிகள் நடப்பதால், அந்த ஒரு வழிதடத்தை மட்டும் மூடுவதாக ரயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது.
எனவே மக்கள் அனைவரும் வழியை விடுத்து, மாற்று வழியை பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என ரயில்வே நிர்வாகம் கேட்டுள்ளது.