ADDED : ஜன 13, 2024 05:10 AM
ராஜபாளையம்: ராஜபாளையம் ந.அ.அன்னப்பராஜா நினைவு மேல்நிலைப்பள்ளி மாணவர்கள் விவேகானந்தர் கேந்திரம் சார்பில் தென் மாவட்ட மேல்நிலைப்பள்ளிகள் இடையே கன்னியாகுமரியில் நடந்த பண்பாட்டு முகாம் போட்டிகளில் பங்கேற்று பரிசுகள் பெற்றுள்ளனர்.
வெற்றிக்கு உறுதுணையாக இருந்த தமிழ் ஆசிரியர்கள், ஓவிய ஆசிரியை உள்ளிட்டோரை பள்ளிச் செயலர் கிருஷ்ணமூர்த்தி ராஜா பாராட்டினார். பள்ளி தலைமை ஆசிரியர் ரமேஷ் வாழ்த்தினார்.