/உள்ளூர் செய்திகள்/விருதுநகர்/ஆண்டாள் கோயிலில் கூடாரவல்லி உற்ஸவம்ஆண்டாள் கோயிலில் கூடாரவல்லி உற்ஸவம்
ஆண்டாள் கோயிலில் கூடாரவல்லி உற்ஸவம்
ஆண்டாள் கோயிலில் கூடாரவல்லி உற்ஸவம்
ஆண்டாள் கோயிலில் கூடாரவல்லி உற்ஸவம்
ADDED : ஜன 13, 2024 04:50 AM
ஸ்ரீவில்லிபுத்தூர், ;ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயிலில் நேற்று காலை கூடாரவல்லி உற்ஸவம் நடந்தது.
'கூடாரை வெல்லும் சீர் கோவிந்தா' என்ற பாசுரப்படி ஆண்டுதோறும் மார்கழி 27ல் ராமானுஜர் சார்பில் பெருமாளுக்கு அக்கார அடிச்சல் சமர்ப்பித்து ஆண்டாளின் பிரார்த்தனையை நிறைவேற்றும் வகையில் இக்கோயிலில் கூடாரவல்லி உற்ஸவம் நடப்பது வழக்கம்.
அதன்படி நேற்று அதிகாலை 4:00 மணிக்கு ஆண்டாள், ரெங்கமன்னாருக்கு சிறப்பு பூஜைகள் நடந்தது. பின்னர் 100 வெள்ளிக்கிண்ணங்களில் அக்கார அடிசல், வெண்ணெய் சமர்ப்பிக்கப்பட்டு சிறப்பு வழிபாடு நடந்தது. ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.