ADDED : ஜன 01, 2024 05:00 AM
சாத்துார்: சாத்துார் அருகே இரவார்பட்டியில் மின்னொளி கபடி போட்டி துவக்க விழா நேற்று நடந்தது.
மின்னொளியில் நடைபெறும் கபடி போட்டியில் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து 46 அணிகள் கலந்து கொண்டு விளையாடுகின்றன. இரண்டு நாட்கள் நடைபெறும் இந்த கபடி போட்டியில் வெற்றி பெறும் அணிகளுக்கு கோப்பைகள் ரொக்க பரிசு வழங்கப்படும். நேற்று நடந்த துவக்க விழாவில் முக்கிய பிரமுகர்கள் பலர் கலந்து கொண்டனர்.