ADDED : ஜன 31, 2024 12:07 AM

விருதுநகர் : விருதுநகர் கலெக்டர் அலுவலகத்தில் ஜாக்டோ ஜியோ அமைப்பினர் 2003 ஏப். 1 க்கு பிறகு பணியில் சேர்ந்தவர்களுக்கும் பழைய ஒய்வூதியத்திட்டத்தை அமல்படுத்துதல் உள்ளிட்ட 10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணி மாநிலத்தலைவர் குணசேகரன் தலைமையில் போராட்டம் நடந்தது.
இதில் ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி மாவட்டச் செயலாளர் வைரமுத்து, தமிழ்நாடு முதுநிலைபட்டதாரி ஆசிரியர் கழக மாவட்டச்செயலாளர் முத்தையா, தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க மாவட்டச்செயலாளர் கருப்பையா, தமிழ்நாடு உடற்கல்வி, இயக்குநர்கள் சங்க மாவட்டச்செயலாளர் பிச்சை உள்பட நிர்வாகிகள் பலர் பங்கேற்றனர்.