/உள்ளூர் செய்திகள்/விருதுநகர்/திறந்தவெளியில் தின்பண்டங்கள் விற்பதை தடுப்பது அவசியம் துாசி படிந்து தொற்றுநோய் பரவும் அச்சம்திறந்தவெளியில் தின்பண்டங்கள் விற்பதை தடுப்பது அவசியம் துாசி படிந்து தொற்றுநோய் பரவும் அச்சம்
திறந்தவெளியில் தின்பண்டங்கள் விற்பதை தடுப்பது அவசியம் துாசி படிந்து தொற்றுநோய் பரவும் அச்சம்
திறந்தவெளியில் தின்பண்டங்கள் விற்பதை தடுப்பது அவசியம் துாசி படிந்து தொற்றுநோய் பரவும் அச்சம்
திறந்தவெளியில் தின்பண்டங்கள் விற்பதை தடுப்பது அவசியம் துாசி படிந்து தொற்றுநோய் பரவும் அச்சம்
ADDED : பிப் 12, 2024 04:19 AM
காரியாபட்டி: மாவட்டத்தில் பஸ் ஸ்டாண்ட், ரோட்டோரம், பள்ளிக்கூடம், வீதிகள் என கண்ட இடங்களில் திறந்த வெளியில் தின்பண்டங்கள், காய்கறிகளை விற்பனை செய்கின்றனர்.
காற்றுக்கு தூசி பறந்து தின்பண்டங்கள், காய்கறிகளில் விழுகின்றன. வாகனங்களில் இருந்து வெளிப்படும் புகையினால் கரியமில வாயு படிகின்றன. மாசு ஏற்படுவதால் தொற்று நோய் பரவும் அபாயம் உள்ளது. திறந்தவெளியில் விற்பதை தடுக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் எதிர்பார்க்கின்றனர்.
மாவட்டத்தில் பள்ளிக்கூடங்கள் முன், பஸ் ஸ்டாண்டு பகுதிகள், வீதி ஓரம், ரோடு மார்க்கம், ஹோட்டல்கள், டீக்கடைகள் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் தின்பண்டங்கள், உணவுப் பொருட்களை பாதுகாப்பற்ற முறையில் விற்பனை செய்கின்றனர். அதேபோல் ரோட்டோரங்களில் காய்கறி கடைகளை விரித்து வைத்துள்ளனர். காற்றடிக்கும் போது வெளிப்படும் தூசிகள் தின்பண்டங்கள், காய்கறிகளில் விழுகின்றன. அதேபோல் வாகனங்களில் இருந்து வெளிப்படும் புகையினால் கரியமில வாயுக்கள் தின்பண்டங்கள், காய்கறிகளில் படிக்கின்றன. இதனை பெரும்பாலானவர்கள் வாங்கி சாப்பிடுகின்றனர்.
அதேபோல் பள்ளி இடைவேளையின் போது மாணவர்கள் சாப்பிடுகின்றனர். சிறுவர்களுக்கு நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக இருக்கும். தூசி படிந்த தின்பண்டங்கள் சாப்பிடும் போதும், காய்கறிகளை சமைத்து சாப்பிடும் போதும் நோய் எதிர்ப்பு சக்தி இன்மையால் பல்வேறு நோய்த்தொற்றுகள் பாதிக்கப்படும் அபாயம் உள்ளது. ரோட்டோர வியாபாரிகளும் பொறுப்புடன், கவனமாக விற்பனை செய்ய வேண்டும்.
பாதுகாப்பான, சுகாதாரமாக இருக்க வேண்டும் என்கிற எண்ணம் இருக்க வேண்டும். பெரும்பாலான வியாபாரிகள் வியாபாரம் நடந்தால் போதும் என சுகாதாரமற்ற உணவுப் பொருட்களை வாடிக்கையாளர்கள் தலையில் கட்டி விடுகின்றனர். அதிகாரிகளும் கண்டும் காணாமல் விட்டு விடுகின்றனர்.
இதனை மாவட்ட உணவு பாதுகாப்பு துறை மட்டுமல்லாது, நகராட்சி, பேரூராட்சியில் உள்ள உணவு பாதுகாப்பு பிரிவினர் இது போன்ற விற்பனைகளை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். வாரம் தோறும் சோதனை நடத்தினால் தான் திறந்த வெளி தின்பண்டங்களின் எண்ணிக்கை குறையும்.
மாணவர்கள், மக்கள் நலன் கருதி மாவட்ட நிர்வாகம் அடிக்கடி ஆய்வு நடத்த உணவு பாதுகாப்பு துறை பிரிவினரிடம் அறிவுறுத்த வேண்டும் என சமூக ஆர்வலர்கள் எதிர்பார்க்கின்றனர்.