/உள்ளூர் செய்திகள்/விருதுநகர்/காரியாபட்டியில் ரோட்டோர ஆக்கிரமிப்பை அகற்றி பேவர் பிளாக் கற்கள் பதிக்க எதிர்பார்ப்புகாரியாபட்டியில் ரோட்டோர ஆக்கிரமிப்பை அகற்றி பேவர் பிளாக் கற்கள் பதிக்க எதிர்பார்ப்பு
காரியாபட்டியில் ரோட்டோர ஆக்கிரமிப்பை அகற்றி பேவர் பிளாக் கற்கள் பதிக்க எதிர்பார்ப்பு
காரியாபட்டியில் ரோட்டோர ஆக்கிரமிப்பை அகற்றி பேவர் பிளாக் கற்கள் பதிக்க எதிர்பார்ப்பு
காரியாபட்டியில் ரோட்டோர ஆக்கிரமிப்பை அகற்றி பேவர் பிளாக் கற்கள் பதிக்க எதிர்பார்ப்பு
ADDED : பிப் 06, 2024 12:13 AM
காரியாபட்டி, : காரியாபட்டியில் மதுரை- அருப்புக்கோட்டை, கள்ளிக்குடி- திருச்சுழி ரோட்டில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றி, இடையூறு இன்றி ஓரமாக மக்கள் நடந்து செல்ல வசதியாக பேவர் பிளாக் கற்கள் பதிக்க வேண்டும் என எதிர்பார்ப்புடன் உள்ளனர்.
காரியாபட்டிக்கு சுற்று கிராமங்களிலிருந்து மக்கள் தினமும் ஆயிரக்கணக்கானோர் பல்வேறு தேவைகளுக்காக இங்கு வந்து செல்கின்றனர். கடை வீதிகளுக்கு பொருட்கள் வாங்க டூவீலர்களில் வரும் வாடிக்கையாளர்கள் ரோட்டில் குறுக்கும் நெடுக்குமாக நிறுத்தி போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படுத்துகின்றனர்.
ரோட்டோரம் கடைகள் வைத்திருப்பவர்கள் ரோடு வரை ஆக்கிரமித்து செட்டு அமைத்துள்ளனர். ஒரு பஸ் கூட எளிதாக சென்று வர முடியவில்லை. தினமும்போக்குவரத்து நெருக்கடியால் வாகன ஓட்டிகள் சிக்கித் திணறுகின்றனர்.
கள்ளிக்குடி--திருச்சுழி ரோடு, மதுரை -அருப்புக்கோட்டை ரோட்டில் பஜாரில் இருந்து செவல்பட்டி வரை ரோட்டில் விளம்பர பலகைகள், தள்ளுவண்டி கடைகள், காய்கறி கடைகள் என ஆக்கிரமிப்பின் பிடியில் சிக்கி உள்ளதால் அடிக்கடி விபத்து நடக்கிறது. மக்கள்நடந்து செல்ல அச்சப்படுகின்றனர்.
தற்போது சாக்கடை கட்டும் பணிகள் நடைபெற்று முடியும் தருவாயில் உள்ளன. நெடுஞ்சாலைத்துறைக்கு சொந்தமான இடம் ஏராளமாக உள்ளது.ஆக்கிரமிப்புகளை அகற்றி, இடையூறு இன்றி மக்கள் ஓரமாக நடந்து செல்ல வசதியாக முக்கு ரோட்டில் இருந்து பஜார் வரையிலும், கள்ளிக்குடி பிரிவு ரோடு வரையிலும்பேவர் பிளாக் கற்கள் பதிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என மக்கள் எதிர்பார்க்கின்றனர்.