Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/விருதுநகர்/ஊராட்சிகளில் விளையாட்டு உபகரணங்கள் பயன்பாடின்றி சேதமடைந்து வரும் பரிதாபம்

ஊராட்சிகளில் விளையாட்டு உபகரணங்கள் பயன்பாடின்றி சேதமடைந்து வரும் பரிதாபம்

ஊராட்சிகளில் விளையாட்டு உபகரணங்கள் பயன்பாடின்றி சேதமடைந்து வரும் பரிதாபம்

ஊராட்சிகளில் விளையாட்டு உபகரணங்கள் பயன்பாடின்றி சேதமடைந்து வரும் பரிதாபம்

ADDED : ஜன 26, 2024 05:06 AM


Google News
அருப்புக்கோட்டை; கிராமப்புற மாணவர்களின் விளையாட்டுத் திறனை மேம்படுத்த ஊராட்சிகள் மூலம் அமைக்கப்பட்ட விளையாட்டு உபகரணங்கள் பராமரிப்பு இல்லாததால் பயன்பாடின்றி சேதமடைந்து கிடக்கிறது.

கிராமப் பகுதிகளில் இளைஞர்களின் விளையாட்டுத் திறமையை ஊக்கப்படுத்தவும், ஆரோக்கியம் மனவளத்தை மேம்படுத்தவும், கூட்டு மனப்பான்மையை உருவாக்கவும் அரசு விளையாட்டு உபகரணங்கள், ஆடுகளங்கள், திறந்தவெளி உடற்பயிற்சி மையம் அமைத்தல் உட்பட பால வசதிகளை செய்துள்ளது. ஏற்கனவே அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தின் கீழ் 2006 இல் இருந்து ஒவ்வொரு ஆண்டும் 2 லட்சம் ரூபாய் செலவில் விளையாட்டு உபகரணங்கள் வாங்கப்பட்டன.

கிரிக்கெட், கால்பந்து, கைப்பந்து, கேரம் போட்டிகளில் பங்கேற்கும் வகையில் பெரும்பாலான ஊராட்சிகளில் பொருட்கள் வாங்கப்பட்டது. இவற்றிற்கு முறையான உடற்பயிற்சி கூடம் அமைக்காததால் உபகரணங்கள் மழையிலும் வெயிலிலும் சேதம் அடைந்து துருப்பிடித்து விட்டது. அருப்புக்கோட்டை ஊராட்சி ஒன்றியத்தில் திருவிருந்தாள்புரம், சுக்கிலநத்தம் உட்பட ஊராட்சிகளில் திறந்த வெளியில் அமைக்கப்பட்ட உடற் பயிற்சி கருவிகள் சேதம் அடைந்துள்ளன.

மாவட்ட நிர்வாகம் இதுகுறித்து நடவடிக்கை எடுத்து ஊராட்சிகளில் இளைஞர்களின் நலனை கருத்தில் கொண்டு தேவையான உடற்பயிற்சி கருவிகள், உடற்பயிற்சி கூடங்கள் மீண்டும் செயல்பட முனைப்பு காட்டவேண்டும்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us