நல்லாட்சி நடத்துவதில் கவனம்: பிரதமர் மோடி உறுதி
நல்லாட்சி நடத்துவதில் கவனம்: பிரதமர் மோடி உறுதி
நல்லாட்சி நடத்துவதில் கவனம்: பிரதமர் மோடி உறுதி
ADDED : ஜூன் 09, 2025 10:44 AM

புதுடில்லி: ''நல்லாட்சி, மாற்றத்தில் தெளிவான கவனம் செலுத்தப்படுகிறது'' என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
இது குறித்து சமூக வலைதளத்தில் பிரதமர் மோடி வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது: நல்லாட்சி, மாற்றத்தில் தெளிவான கவனம் செலுத்தப்படுகிறது. 140 கோடி இந்தியர்களின் ஆசீர்வாதம், கூட்டு பங்கேற்பால் பல்வேறு துறைகளில் விரைவான மாற்றம் ஏற்பட்டுள்ளது. வேகம், அளவு உணர்திறன் கொண்ட புதிய மாற்றங்களை தே.ஜ., கூட்டணி அரசு வழங்கி உள்ளது.
பொருளாதார வளர்ச்சியில் இருந்து சமூக மேம்பாடு வரை, அனைத்து வகையான முன்னேற்றத்திலும் கவனம் செலுத்தப்படுகிறது. இந்தியா இன்று வேகமாக வளர்ந்து வரும் பெரிய பொருளாதாரமாக மட்டுமல்லாமல், அனைத்து உலகளாவிய பிரச்னைகளுக்கும் குரல் கொடுக்கிறது. எங்கள் கூட்டு வெற்றியை பற்றி நாங்கள் பெருமைப்படுகிறோம்.
கடந்த 11 ஆண்டுகளில் மத்திய அரசின் ஒவ்வொரு திட்டமும் ஏழை சகோதர, சகோதரிகள் மற்றும் சாமானிய மக்களின் நலனை உறுதி செய்வதாக இருந்தது. சேவை மனப்பான்மையுடன் மக்களின் வாழ்க்கையை எளிதாக்குவதற்கு நாங்கள் அனைத்து முயற்சிகளையும் மேற்கொண்டுள்ளோம். நகர்புற மற்றும் கிராமப்புற பெண்கள் கண்ணியத்துடனும், தன்னம்பிக்கையுடன் வாழ அதிகாரம் அளிக்கப்பட்டு உள்ளது. இவ்வாறு பிரதமர் மோடி கூறினார்.