பொங்கலுக்கு கரும்பு அறுவடை தீவிரம்
பொங்கலுக்கு கரும்பு அறுவடை தீவிரம்
பொங்கலுக்கு கரும்பு அறுவடை தீவிரம்
ADDED : ஜன 11, 2024 04:30 AM

அருப்புக்கோட்டை : அருப்புக்கோட்டை பகுதியில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு கரும்பு அறுவடை பணி தீவிரமாக நடக்கிறது.
அருப்புக்கோட்டை செம்பட்டி, புலியூரான் பகுதிகளில் 50 ஏக்கருக்கும் மேல் கரும்பு விவசாயம் நடக்கிறது. புலியூரான் பகுதியில் விளையும் கரும்பு நன்கு இனிப்பாகவும் பருமனாகவும் உயரமாகவும் இருக்கும். இந்த வகை கரும்புக்கு நல்ல கிராக்கி உள்ளது.
தற்போது தைப்பொங்கல் பண்டிகை நெருங்கி வரும் நிலையில் கரும்பு அறுவடை பணி மும்முரமாக நடந்து வருகிறது. நாகர்கோயில், திருநெல்வேலி, மதுரை உட்பட ஊர்களிலருந்து கரும்புகளை வாங்கி செல்கின்றனர். கடந்த ஆண்டு 1 கட்டு கரும்பு விலை 450 ஆக இருந்தது.
இந்த ஆண்டு 1 கட்டு கரும்பு, 200 லிருந்து 220 வரை விற்கப்படுவதாக விவசாயிகள் கூறுகின்றனர். 2 நாட்களாக மழை பெய்ததால், மந்தமாக இருந்த வியாபாரம் நேற்று முதல் சூடு பிடித்துள்ளது.