Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/விருதுநகர்/வீட்டின் கொல்லை புறத்தில் அலங்கார மீன் வளர்ப்பு உதவி இயக்குநர் தகவல்

வீட்டின் கொல்லை புறத்தில் அலங்கார மீன் வளர்ப்பு உதவி இயக்குநர் தகவல்

வீட்டின் கொல்லை புறத்தில் அலங்கார மீன் வளர்ப்பு உதவி இயக்குநர் தகவல்

வீட்டின் கொல்லை புறத்தில் அலங்கார மீன் வளர்ப்பு உதவி இயக்குநர் தகவல்

ADDED : பிப் 25, 2024 06:14 AM


Google News
விருதுநகர், : விருதுநகர் மாவட்டத்தில் பிரதம மந்திரி மீன்வள மேம்பாட்டுத்திட்டத்தில் மத்திய, மாநில அரசுகளின் மானியத்துடன் வீட்டின் கொல்லை புறத்தில் அலங்கார மீன் வளர்ப்பு செய்து விற்பனை செய்ய முடியும் என உதவி இயக்குநர் தெரிவித்தார்.

மாவட்டத்தில் அருப்புக்கோட்டை, விருதுநகர், சிவகாசி, சாத்துார், காரியப்பட்டி, ஸ்ரீவில்லிப்புத்துார், ராஜபாளையம் உள்ளிட்ட நகர் பகுதிகள், அதனை சுற்றியுள்ள புறநகர், ஊரகப்பகுதிகளில் வசிப்பவர்கள் வீடுகளின் கொல்லை புறத்தில் உள்ள காலி இடத்தில் பிரதம மந்திரியின் மீன்வள மேம்பாட்டுத்திட்டத்தின் மூலம் மத்திய, மாநில அரசுகளின் மானியத்துடன் அலங்கார மீன்வளர்ப்பு செய்து, அதை விற்பனை செய்ய முடியும்.

இதற்காக வீடுகளின் பின்புறம் 300 சதுர அடி இடத்தை தேர்வு செய்து ஷேடு நெட் அமைக்க வேண்டும். இந்த இடத்தில் தலா 3 ஆயிரம் லிட்டர் கொள்ளளவு கொண்ட 6 சிமெண்ட் தொட்டிகள் ஏற்படுத்த வேண்டும். வளர்ப்புக்கு தேவையான கப்பி, மோலி, தங்க மீன், கொய் வகையான மீன்களை கருவுற்று நிலையில் வாங்கி 150 லி கொள்ளளவு கொண்ட கண்ணாடி தண்ணீர் தொட்டியில் வளர்க்க வேண்டும்.

அதன் பின் குட்டி மீன்கள் பிறந்தவுடன் தனியாக பிரித்து 30 ஆயிரம் குஞ்சுகள் வரை சிமெண்ட் தொட்டியில் வளர்க்கலாம். இந்த மீன்குஞ்சுகளை 30 முதல் 45 நாள்கள் வளர்த்து இனத்திற்கு தகுந்தாற் போல தலா ரூ. 1. 50 முதல் ரூ. 5 வரை விற்பனை செய்ய முடியும்.

இந்த கொல்லைப்புறத்தில் அலங்கார மீன் வளர்ப்பிற்கு மேற்கண்ட முறையை பின்பற்றினால் அதிகபட்சமாக ரூ. 3 லட்சம் செலவாகும். சிமெண்ட், கண்ணாடி தொட்டிகள், பைப், தண்ணீர் வசதி, மின் விளக்குகள், பராமரிப்பு, கருவுற்ற மீன்கள் வாங்குதல், மீன் தீவனம், வேலை ஆட்கள் கூலி, விற்பனை செய்ய பாலீதின் கவர்கள், ஆக்ஸிஜன் சிலிண்டர் உள்ளிட்டவைகளுக்கு மத்திய, மாநில அரசுகள் ரூ. 1. 8 லட்சம் மானியமாக வழங்குகின்றது.

இந்த மானியத்தொகை 15 நாள்களில் பயனாளிகளின் வங்கி கணக்கில் வரவு வைக்கப்படுகிறது. இந்த திட்டத்தில் சேர விருப்பம் உள்ளவர்கள் மீன்வளத்துறை அலுவலகத்தில் நேரில் வந்து கூடுதல் தகவல்களை பெற்றுக்கொள்ளலாம் என மீன்வளத்துறை உதவி இயக்குநர் ராஜேந்திரன் தெரிவித்தார்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us