/உள்ளூர் செய்திகள்/விருதுநகர்/ஸ்ரீவி.,யில் ரா.கிருஷ்ணசாமி நாயுடு அறக்கட்டளை துவக்க விழாஸ்ரீவி.,யில் ரா.கிருஷ்ணசாமி நாயுடு அறக்கட்டளை துவக்க விழா
ஸ்ரீவி.,யில் ரா.கிருஷ்ணசாமி நாயுடு அறக்கட்டளை துவக்க விழா
ஸ்ரீவி.,யில் ரா.கிருஷ்ணசாமி நாயுடு அறக்கட்டளை துவக்க விழா
ஸ்ரீவி.,யில் ரா.கிருஷ்ணசாமி நாயுடு அறக்கட்டளை துவக்க விழா
ADDED : ஜன 06, 2024 05:16 AM

ஸ்ரீவில்லிபுத்தூர்: ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே பி.ராமச்சந்திராபுரத்தில் தமிழ்நாடு காங்கிரஸ் முன்னாள் தலைவர் ரா. கிருஷ்ணசாமி நாயுடு அறக்கட்டளை துவக்க விழா நேற்று நடந்தது.
தலைவர் பிரேமா வரதராஜுலு தலைமை வகித்தார். ஓய்வு பெற்ற தமிழக அரசு துறை செயலர் வரதராஜீலு. வரவேற்றார்.
அறக்கட்டளையை துவக்கி வைத்து ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ, தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் வாசன் வாழ்த்தி பேசினர்.
பள்ளி மாணவர்களுக்கு நிதியுதவி, பெண்களுக்கு தையல் இயந்திரங்கள், மாற்றுத்திறனாளிகளுக்கு மூன்று சக்கர சைக்கிள்கள், சக்கர நாற்காலிகள் உட்பட பல்வேறு நலத்திட்ட உதவிகளை வழங்கப்பட்டது.
விழாவில் தமிழ் மாநில காங்கிரஸ் நிர்வாகி சித்தன், சாத்தூர் ம.தி.மு.க. எம்.எல்.ஏ. ரகுராமன், பல்வேறு கட்சி நிர்வாகிகள், கிருஷ்ணசாமி நாயுடு குடும்பத்தினர், கிராம மக்கள் பங்கேற்றனர். முன்னாள் எம்.எல்.ஏ. ராஜகோபால் நன்றி கூறினார்.
முன்னதாக கிருஷ்ணசாமி நினைவு இல்லத்தில் அவரது படத்திற்கு, வைகோ, வாசன் உட்பட முக்கிய நிர்வாகிகள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.