ADDED : ஜன 29, 2024 05:04 AM
விருதுநகர்: விருதுநகர் மாவட்டத்தில் சட்டவிரோதமாக பட்டாசு மூலப்பொருட்கள் வைத்திருத்தல், தயார் செய்தல், பட்டாசுகளை அனுமதி இல்லாத கோடவுன்களில் வைத்தல், உரிமம் இல்லாதவர்களுக்கு வெடிமருந்துகளை விற்பனை செய்தல், தயாரிப்பு நிறுவனங்கள் நிபந்தனைகளை மீறி செயல்படுவது உள்ளிட்ட செயல்களில் ஈடுபடுவோர் மீது குற்றவியல் நடவடிக்கை எடுக்கப்படும்.
இது போன்ற குற்ற நடவடிக்கைகளில் ஈடுபடுவோர் மீது குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என எஸ்.பி., பெரோஸ் கான் அப்துல்லா அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.