ADDED : செப் 11, 2025 05:39 AM
சாத்துா ர் : சாத்துார் மற்றும் சுற்று கிராமங்களில் நேற்று மதியம் 2:45 மணி முதல் 3: 20 மணி வரை பலத்த மழை பெய்தது.
சாத்துார் மற்றும் சுற்று கிராமங்களில் கடந்த சில வாரங்களாக கோடை காலம் போலவெயில் சுட்டெரித்து வந்தது.
அதிகாலை 6:30 மணி முதல் மாலை 6:30 மணி வரை கடும் வெயில்அடித்ததால் மக்கள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகி தவித்து வந்தனர்.
இந்த நிலையில் நேற்று மதியம் 2:45 மணிக்கு காற்றுடன் மழை பெய்ய துவங்கியது.இடி மின்னலுடன் பெய்த மழை காரணமாக நகரின் தாழ்வான பகுதிகளில் மழை நீர் குளம் போல் தேங்கின. முன்னெச்சரிக்கையாக மின்சாரத் துறையினர் நகர், ஊராட்சி பகுதிகளில் மின் சப்ளையை துண்டித்தனர்.
நீண்ட நாட்களுக்குப் பிறகு சாத்துாரில் பெய்த மழை காரணமாக மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.