/உள்ளூர் செய்திகள்/விருதுநகர்/ நாளை மாணவர்கள் உயர்கல்வி சேர்க்கைக்கான குறைதீர் கூட்டம் நாளை மாணவர்கள் உயர்கல்வி சேர்க்கைக்கான குறைதீர் கூட்டம்
நாளை மாணவர்கள் உயர்கல்வி சேர்க்கைக்கான குறைதீர் கூட்டம்
நாளை மாணவர்கள் உயர்கல்வி சேர்க்கைக்கான குறைதீர் கூட்டம்
நாளை மாணவர்கள் உயர்கல்வி சேர்க்கைக்கான குறைதீர் கூட்டம்
ADDED : மே 16, 2025 02:58 AM
விருதுநகர்: விருதுநகர் மாவட்டத்தில் மாணவர்கள் உயர்கல்வி சேர்க்கைக்கான சிறப்பு குறைதீர் கூட்டம் நாளை(மே 17) நடக்க உள்ளது.
கலெக்டர் ஜெயசீலன் செய்திக்குறிப்பு: கலெக்டர் அலுவலகத்தில் அரசு, உதவி பெறும் பள்ளிகளில் பிளஸ் 2 வகுப்பு தேர்வு எழுதி தேர்ச்சி பெற்ற மாணவர்களை கல்லுாரி, தொழிற்பயிற்சி கல்வியில் சேர்வது தொடர்பான சிறப்பு குறைதீர் கூட்டம் மே 17 மதியம் 3:00 மணிக்கு நடக்கிறது. இதில் பிளஸ் 2 தேர்வு எழுதி தேர்ச்சி பெற்ற மாணவர்கள், கல்லுாரியில் சேர இயலாத மாணவர்கள் பங்கு பெறலாம்.
2025--26 கல்வியாண்டு மட்டுமல்லாது அதற்கு முந்தைய கல்வியாண்டுகளிலும் பயின்று கல்லுாரியில் சேராத மாணவர்களும் இக்குறைத்தீர் கூட்டத்தில் கலந்து கொள்ளலாம்.
இதன் மூலம் மாணவர்களுக்கு உடனடியாக கல்லுாரியில் சேர்வதற்கான ஆலோசனைகள் வழங்கப்படும். உயர்கல்வியில் சேர்வதற்கான சந்தேகங்கள், கோரிக்கைகள் குறித்த தகவல்களை பங்கேற்று பயனடையலாம், என்றார்.