/உள்ளூர் செய்திகள்/விருதுநகர்/ அலைபேசியை தர மறுத்த தம்பி மகன் கொலை பெரியப்பா கைது அலைபேசியை தர மறுத்த தம்பி மகன் கொலை பெரியப்பா கைது
அலைபேசியை தர மறுத்த தம்பி மகன் கொலை பெரியப்பா கைது
அலைபேசியை தர மறுத்த தம்பி மகன் கொலை பெரியப்பா கைது
அலைபேசியை தர மறுத்த தம்பி மகன் கொலை பெரியப்பா கைது
ADDED : ஜூன் 01, 2025 01:05 AM
காரியாபட்டி: விருதுநகர் மாவட்டம் காரியாபட்டி அருகே அலைபேசியை தர மறுத்த தம்பி மகன் கார்த்தியை13, கொலை செய்த பெரியப்பா ராமரை 52,போலீசார் கைது செய்தனர்.
காரியாபட்டி அச்சம்பட்டியை சேர்ந்தவர் லட்சுமணன். இவரது மகன் கார்த்தி . சில தினங்களுக்கு முன் மர்மமான முறையில் வீட்டில் இறந்து கிடந்தார். போலீசார் விசாரணையில், லட்சுமணன் உடன் பிறந்த அண்ணன் ராமரின் அலைபேசியில் கார்த்தி கேம் விளையாடிக் கொண்டிருந்த போது கள்ளக்காதலி அலைபேசியிலிருந்து அழைப்பு வந்தது. ராமர் எடுக்காததால் அவர் வீடு தேடி வந்தார். தம்பி மகன் கார்த்தியிடம் அலைபேசி இருப்பதை போதையில் இருந்த ராமர் தெரிவித்தார். கள்ளக் காதலி திட்டியதால் ஆத்திரமடைந்து அலைபேசியை கேட்டார். கார்த்தி கொடுக்க மறுத்ததால் ஆத்திரத்தில் கன்னத்தில் அறைந்து, கழுத்தை பிடித்து நெரித்தார். மூச்சுத் திணறல் ஏற்பட்டதில் உயிரிழந்தார். அவர் துாக்கிட்டு தற்கொலை செய்தது போல் சேலையை கழுத்தில் கட்டி வைத்து விட்டு ஒன்றும் தெரியாதது போல் இருந்ததை ஒப்புக் கொண்டார். காரியாபட்டி போலீசார் அவரை கைது செய்தனர்.