Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/விருதுநகர்/அரசு அலுவலகங்களில் இடைத்தரகர்கள் ஆதிக்கம்! சான்றிதழுக்காக அலைக்கழிக்கும் கொடுமை

அரசு அலுவலகங்களில் இடைத்தரகர்கள் ஆதிக்கம்! சான்றிதழுக்காக அலைக்கழிக்கும் கொடுமை

அரசு அலுவலகங்களில் இடைத்தரகர்கள் ஆதிக்கம்! சான்றிதழுக்காக அலைக்கழிக்கும் கொடுமை

அரசு அலுவலகங்களில் இடைத்தரகர்கள் ஆதிக்கம்! சான்றிதழுக்காக அலைக்கழிக்கும் கொடுமை

ADDED : ஜூன் 24, 2024 01:35 AM


Google News
ஸ்ரீவில்லிபுத்தூர் : மாவட்டத்தில் பல்வேறு துறைகளில் மக்கள் நல உதவி திட்டங்கள் பெறவும், சான்றிதழ் பெறவும் அதிகாரிகளை நேரடியாக சந்தித்தாலும் கிடைக்காமல் அலைக்கழிக்கப்பட்டு வருகின்றனர். ஆனால் அந்த அலுவலகங்களில் இடைத்தரகர்கள் மூலம் எளிதாக அனைத்தையும் பணம் கொடுத்து பெற வேண்டிய அவலம் நீடித்து வருகிறது.

உள்ளாட்சி அமைப்புகள், வருவாய் துறை, பத்திரப்பதிவு, சமூக நலத்துறை உட்பட பல்வேறு அரசு துறைகளில் தங்களுக்கு உரிய நலத் திட்ட உதவிகள் பெறுதல், சான்றிதழ்கள் பெறுதல் உட்பட பல்வேறு காரணங்களுக்காக் சம்பந்தப்பட்ட அரசு அலுவலகங்களுக்கு வருகின்றனர்.ஆனால், எந்த ஒரு அரசு அலுவலகத்திலும் மக்களுக்கு சரியான வழி காட்டு விதிமுறைகளை அதிகாரிகள் சொல்வதில்லை. ஆன்லைன் மூலம் விண்ணப்பித்தாலும் சம்பந்தப்பட்ட அலுவலரை நேரில் சந்தித்து கவனித்தால் மட்டுமே வேலை நடக்கிறது. இல்லையெனில் விண்ணப்பித்தவர்கள் ஏதாவது ஒரு காரணத்தால் அலைக் கழிக்கப் படுகின்றனர்.இதில் நேரடியாக லஞ்சம் வாங்க விரும்பாதவர்கள், இடைத்தரகர்கள் மூலம் வாங்குகிறார்கள். இதற்காக ஒவ்வொரு அரசு துறையிலும் இடைத்தரகர்கள ்செயல்படுகின்றனர். இவர்களிடம் பணம் கொடுத்து எளிதில் சான்றிதழோ, மக்கள் நல உதவி திட்டங்களோ எளிதில் பெற்று வருகின்றனர். இதனால் மக்கள் மிகுந்த வேதனையடைந்து வருகின்றனர்.வருவாய்துறையில் ஜாதி, இருப்பிட, வருவாய் சான்றிதழ், உள்ளாட்சிகளில் பிறப்பு, இறப்பு, கட்டட பிளான் ஒப்புதல் உட்பட பல்வேறு சான்றிதழுக்காக பலரும் ஆன்லைனில் விண்ணப்பம் செய்து பல நாட்களாகியும் இழுத்தடிக்கும் நிலை தான் உள்ளது. இதை தவிர்க்க மாவட்ட நிர்வாகம் அரசு அலுவலகங்களில் இடைத்தரகர்களை விரட்டியடிப்பதோடு, லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் அரசு அலுவலகங்களில் அடிக்கடி சோதனை நடத்தி மக்களுக்கு எளிதில் அனைத்தும் கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென மக்கள் விரும்புகின்றனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us