/உள்ளூர் செய்திகள்/விருதுநகர்/ மேற்கு தொடர்ச்சி மலையடிவார பகுதிகளில் சிறுத்தை நடமாட்டம் மேற்கு தொடர்ச்சி மலையடிவார பகுதிகளில் சிறுத்தை நடமாட்டம்
மேற்கு தொடர்ச்சி மலையடிவார பகுதிகளில் சிறுத்தை நடமாட்டம்
மேற்கு தொடர்ச்சி மலையடிவார பகுதிகளில் சிறுத்தை நடமாட்டம்
மேற்கு தொடர்ச்சி மலையடிவார பகுதிகளில் சிறுத்தை நடமாட்டம்
ADDED : ஜூன் 24, 2024 11:58 PM
ஸ்ரீவில்லிபுத்தூர் : ஸ்ரீவில்லிபுத்தூர், வத்திராயிருப்பு மேற்கு தொடர்ச்சி மலையடிவார பகுதிகளில் சிறுத்தை, யானைகள் நடமாட்டம் இருப்பதாக விவசாயிகள் அச்சமடைந்துள்ளனர்.
ஸ்ரீவில்லிபுத்தூர் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் புலி, சிறுத்தை, யானை, மான் உட்பட ஏராளமான வனவிலங்குகள் உள்ளது. இதில் மான்கள் சர்வ சாதாரணமாக மலை அடிவாரப் பகுதி, விவசாய நிலங்களை கடந்து நகர் பகுதியில் வந்து செல்லும் நிலை காணப்படுகிறது.
மாம்பழ சீசன் போது யானைகள் மலையடிவார தோப்புகளுக்கு வந்து சேதப்படுத்தியது. கடந்த சில நாட்களாக வத்திராயிருப்பு, கான்சாபுரம் மலை அடிவாரப் பகுதிகளில் சிறுத்தை நடமாட்டம் காணப்பட்டதாக, மலையடிவார தோப்புகளில் தங்கி வேலை செய்யும் தொழிலாளர்கள் கூறினர். இதனால் அங்கு வேலை செய்யும் தொழிலாளர்களும், விவசாயிகளும் அச்சமடைந்துள்ளனர்.
இது குறித்து வத்திராயிருப்பு வனத்துறையினர் கூறுகையில், கடந்த மாதம் வரை மலையடிவார பகுதிகளில் யானைகள் நடமாட்டம் காணப்பட்டது. தற்போது அடர்வனப் பகுதிகளுக்குள் சென்று விட்டது. எப்போவது தான் ஏதாவது யானை நடமாட்டம் காணப்படுகிறது. அதனையும் நாங்கள் வனப்பகுதிக்குள் விரட்டி வருகிறோம் என்றனர்.
ஸ்ரீவில்லிபுத்தூர் வனத்துறையினர் கூறுகையில், மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதிகளில் சிறுத்தைகள் இருப்பது உண்மைதான். ஆனால், அவைகள் மலை அடிவாரத் தோப்புகளில் காணப்படவில்லை. வ.புதுப்பட்டி மலையடி வர பகுதியில் சிறுத்தையை பார்த்ததாக விவசாயிகள் கூறியது நம்பத் தகுந்தது அல்ல. அது காட்டுப் பூனையாக கூட இருக்கலாம். இருந்த போதிலும் தீவிரமாக கண்காணித்து வருகிறோம் என்றனர்.
மலை அடிவாரப் பகுதிகளில் வனவிலங்குகள் நடமாடுவதை தடுக்க வனத்துறையினர் ரோந்து பணியை தீவிர படுத்த வேண்டும் என விவசாயிகள் எதிர்பார்க்கின்றனர்.