ADDED : ஜன 01, 2024 05:02 AM
விருதுநகர்; விருதுநகர் மாவட்ட கால்பந்தாட்ட கழகம் சார்பில் மாவட்ட அளவிலான கால்பந்து லீக் போட்டிகள் டிச. 24 துவங்கி பிப். 25 வரை நடக்கிறது. இப்போட்டியை மாவட்ட கால்பந்தாட்ட கழக துணைத்தலைவர் வேல்ராஜ் தலைமை வகித்து துவக்கி வைத்தார்.
ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமைகளிலும் நடைபெறும் போட்டியில் விருதுநகர், சிவகாசி, சாத்துார், அருப்புக்கோட்டை, ராஜபாளையம் பகுதிகளை சேர்ந்த 17 அணிகள் பங்கேற்கின்றனர். இதில் 'ஏ' பிரிவில் 8 அணிகளும், பி' பிரிவில் 9 அணிகளும் தங்களுக்குள் போட்டியிடுகின்றன.
இறுதியாக ஏ ' பிரிவில் வெற்றி பெறும் அணி மாநில அளவில் நடை பெறும் கால்பந்து போட்டிக்கு தகுதிபெறுகிறது. பி ' பிரிவில் வெற்றி பெறும் அணி ஏ ' பிரிவிற்கு தகுதி பெற்று அடுத்தாண்டு நடக்கும் மாவட்ட கால்பந்தாட்ட போட்டியில் பங்கேற்கும். ஏற்பாடுகளை விருதுநகர் மாவட்ட கால்பந்தாட்ட கழக செயலாளர் மணிகண்டன் உள்பட நிர்வாகிகள் செய்தனர்.