ADDED : பிப் 06, 2024 12:15 AM
விருதுநகர் : விருதுநகர் அருகே ஆனை க்குட்டம் விலக்கில சட்டவிரோத பட்டாசு தயாரிப்பு, மூலபொருட்களை பதுக்கியதால் வெடிவிபத்து நிகழ்ந்தது. இதற்கு காரணமான செல்வராஜ் 46, முனியசாமி 48, முருகன் 58 என மூவரையும் ஆமத்துார் போலீசார் கைது செய்தனர்.
தளவாய்புரத்தைச் சேர்ந்தவர் செல்வராஜ். ஆனைகுட்டத்தில் இவருக்கு சொந்தமான இடத்தில் புதியதாக பட்டாசு கடை திறப்பதற்கு கட்டடம் கட்டி வந்தார்.
இதற்கு பின்னால் தகர செட் அமைத்து பட்டாசு தயாரித்து வந்தனர். பிப். 4 மதியம் 1:45 மணிக்கு பாறைப்பட்டியைச் சேர்ந்த முனியசாமி, சிவகாசியின் போஸ்காலனியைச் சேர்ந்த முருகன், செட்டின் அருகே கம்பிகளை வெல்டிங் வைத்த போது தீப்பொறி ஏற்பட்டு மூலப்பொருட்கள் வெடித்தது. இது தொடர்பாக செல்வராஜ், முனியசாமி, முருகனை ஆமத்துார் போலீசார் கைது செய்தனர்.