ADDED : செப் 19, 2025 01:58 AM

விருதுநகர்: விருதுநகர் தெப்பம் அருகே கிட்டங்கி தெருவைச் சேர்ந்தவர் ரவீந்தரன் 54. இவரது வீட்டில் நேற்று காலை 9:15 மணிக்கு விளக்கு அணைக்காததால் மரப்பலகையில் தீப்பிடித்தது.
தீப்பொறி அருகே இருந்த பட்டாசு கிப்ட் பாக்ஸ் மீது விழுந்து வெடித்து சிதறி வீடுமுழுவதும் தீப்பரவியது. இதனால் சமையலறையில் இருந்த கேஸ் சிலிண்டர் வெடித்தது.
தீயணைப்புத் துறையினர் மூன்று வாகனங்களில் வந்து பொருட்களை வீட்டில் இருந்து வெளியேற்றி தீயை அணைத்தனர். பஜார் போலீசார் விசாரிக்கின்றனர்.