ADDED : செப் 19, 2025 01:58 AM
காரியாபட்டி: காரியாபட்டியில் பிரதமர் நரேந்திர மோடி பிறந்தநாளை முன்னிட்டு, சாதனை விளக்க தெருமுனை கூட்டம் நடந்தது. மாவட்டச் செயலாளர் ஆறுமுகம் தலைமை வகித்தார்.
ஒன்றிய தலைவர் ராஜபாண்டி முன்னிலை வகித்தார். மாவட்ட பார்வையாளர் வெற்றிவேல் பேசினார். நிர்வாகிகள் விஜய ரகுநாதன், பாலமுருகன், ராமலிங்கம், மணிகண்டன், கருப்பசாமி உட்பட கட்சியினர் பங்கேற்றனர்.