Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/விருதுநகர்/பயன்படாத அரசு கட்டடங்கள் விஷப்பூச்சிகளின் கூடாரமாவதால் அச்சம்

பயன்படாத அரசு கட்டடங்கள் விஷப்பூச்சிகளின் கூடாரமாவதால் அச்சம்

பயன்படாத அரசு கட்டடங்கள் விஷப்பூச்சிகளின் கூடாரமாவதால் அச்சம்

பயன்படாத அரசு கட்டடங்கள் விஷப்பூச்சிகளின் கூடாரமாவதால் அச்சம்

ADDED : ஜூலை 09, 2024 04:27 AM


Google News
விருதுநகர்: விருதுநகர் மாவட்டத்தில் பள்ளிகள், ஆரம்ப சுகாதார நிலையம், மருத்துவமனை வளாகங்களில் பயன்படாத கட்டடங்கள் பல அகற்றப்படாமல் உள்ளன. இங்கு உலவும் விஷப்பூச்சிகளால் அச்சம் ஏற்பட்டுள்ளது.

மாவட்டத்தில் நகர்ப்புறத்தில் புதிய பள்ளி, ஆரம்ப சுகாதார நிலையம்,மருத்துவமனை கட்டப்பட்டால் அவை இட வசதியை கருதி இடிக்கப்படுகின்றன. ஆனால் ஊரகபகுதிகளில் அவ்வாறு செய்யப்படுவதில்லை.

அவை ஆண்டுக்கணக்கில் அப்படியே விடப்படுகின்றன. இதனால் மாவட்டத்தில் பல்வேறு அரசு துறைகளின் பயன்படாத கட்டடங்கள் அகற்றப்படாமலே உள்ளன.மாவட்டத்தில் 450 ஊராட்சிகள் உள்ளன.

இவற்றில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட அரசு துவக்கப்பள்ளிகள், நடுநிலைப்பள்ளிகள், உயர்நிலை, மேல்நிலைப்பள்ளிகள் உள்ளன. இப்பள்ளிகளில் சுற்றுச்சுவர், மைதானம் ஆகியவை இல்லாமல் மாணவர்கள் சிரமப்பட்டு வருகின்றனர்.

இதே பள்ளி வளாகங்களில் பயன்படாத பழைய வகுப்பறை கட்டடங்கள், அங்கன்வாடி மையங்கள், பழைய அரசு அலுவலகங்கள் ஆகியவை உள்ளன.இவை மாதக்கணக்கில் அகற்றப்படாமல் இருந்து வருகின்றன.

பள்ளிக்குள் பயன்படாது இருக்கும் இந்த கட்டடங்கள் ஒவ்வொரு மழைக்கும் அதிகளவில் சேதம் ஏற்பட்டு வருகின்றன. அதே நேரம் இவற்றில் உடைந்த நாற்காலிகள், காகித குப்பை போட்டு வைக்கின்றனர்.

பராமரிப்பு இன்றி புதர்மண்டி கிடக்கும் காலி கட்டடங்களில் இருந்து விஷப்பூச்சிகள் அடிக்கடி வெளியில் நடமாடுகின்றன. இதனால் மாணவர்கள் அச்சப்படுகின்றனர்.

இதே போல் ஆரம்ப சுகாதார நிலையங்களின் பழைய கட்டடங்களும் அவற்றின் அப்படியே கிடப்பில் போடப்பட்டுஉள்ளன. கன்னிச்சேரிபுதுார் மேம்படுத்தப்பட்ட ஆரம்ப சுகாதார நிலையத்தின் பின்புறம் வளாகத்தில் பழைய கட்டடங்கள் புதர்மண்டிய சூழலில் காணப்படுகின்றன. கர்ப்பிணிகள், சிறுவர்கள் அடிக்கடி வந்து செல்கின்றனர்.

மருத்துவமனைகளிலும் பல கட்டடங்கள் பயன்படாது விஷப்பூச்சிகளின் கூடாரமாக உள்ளன. ஆகவே மாவட்ட நிர்வாகம் மக்கள், மாணவர்கள் அடிக்கடி பயன்படுத்தும் பள்ளி, மருத்துவமனை, ஆரம்ப சுகாதார நிலையங்களில் பயன்படாத கட்டடங்களை கண்டறிய வேண்டும். அவற்றை இடித்து அப்புறப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us