ADDED : ஜன 28, 2024 07:13 AM

விருதுநகர், : விருதுநகர் கலெக்டர் அலுவலகத்தில் தமிழ்நாடு ஆரம்பள்ளி ஆசிரியர் கூட்டணி சார்பில் அரசாணை எண்.
243 ரத்து செய்து ஒன்றிய முன்னுரிமைப்படி பதவி உயர்வு வழங்குதல், பேச்சு வார்த்தையில் ஏற்றுக்கொள்ளப்பட்ட 12 கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி உண்ணாவிரதப்போராட்டம் மாவட்டச்செயலாளர் வைரமுத்து தலைமையில் நடந்தது. இதில் மாநிலத்தலைவர் குணசேகரன், பொதுச்செயலாளர் வின்சென்ட் பால்ராஜ், மாவட்டப் பொருளாளர் செல்வகணேசன் உள்பட பலர் பங்கேற்றனர்.