ADDED : ஜன 05, 2024 05:18 AM

விருதுநகர் : விருதுநகரில் உயர்மின் கோபுரங்களுக்கு எதிரான விவசாய சங்கங்களின் கூட்டு இயக்கம் சார்பில் உயர் அழுத்த மின் கோபுரத்தால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு கூடுதல் இழப்பீடு தொகை, ஊக்கத்தொகை வழங்க கோரி ஆர்ப்பாட்டம் நடந்தது.
மாநில செயலாளர் விஜயமுருகன் தலைமை வகித்தார். மாவட்ட செயலாளர் முருகன், பொருளாளர் மனோஜ்குமார், துணை தலைவர் சுப்பாராஜ், செயலாளர்கள் பெருமாள், குமராண்டி பங்கேற்றனர். கலெக்டரின் நேர்முக உதவியாளர் பெர்தோஷ் பாத்திமாவிடம் மனு அளித்தனர்.