/உள்ளூர் செய்திகள்/விருதுநகர்/ விஜய கரிசல்குளம் அகழாய்வு செல்லும் வழியில் சீமை கருவேல மரங்கள் அகற்ற எதிர்பார்ப்பு விஜய கரிசல்குளம் அகழாய்வு செல்லும் வழியில் சீமை கருவேல மரங்கள் அகற்ற எதிர்பார்ப்பு
விஜய கரிசல்குளம் அகழாய்வு செல்லும் வழியில் சீமை கருவேல மரங்கள் அகற்ற எதிர்பார்ப்பு
விஜய கரிசல்குளம் அகழாய்வு செல்லும் வழியில் சீமை கருவேல மரங்கள் அகற்ற எதிர்பார்ப்பு
விஜய கரிசல்குளம் அகழாய்வு செல்லும் வழியில் சீமை கருவேல மரங்கள் அகற்ற எதிர்பார்ப்பு
ADDED : செப் 20, 2025 11:26 PM
சிவகாசி: வெம்பக்கோட்டை விஜய கரிசல்குளம் அகழாய்வு நடைபெறும் இடத்திற்கு செல்லும் வழியில் ரோட்டை மறைத்து சீமை கருவேல மரங்கள் நிறைந்து இருப்பதால் பார்வையிட வரும் பள்ளி, கல்லுாரி மாணவர்கள், மக்கள் பெரிதும் சிரமப்படுகின்றனர்.
வெம்பக்கோட்டை விஜய கரிசல் குளத்தில் மூன்றாம் கட்ட அகழாய்வு பணி முடிந்து தற்போது ஆவணப்படுத்தும் பணி நடந்து வருகிறது. மேலும் ஏற்கனவே நடந்து இரு அகழாய்வில் கண்டெடுக்கப்பட்ட பொருட்கள் காட்சிப்படுத்தப்பட்டுள்ளது. கண்காட்சியை பார்வையிடுவதற்கு பள்ளி, கல்லுாரி மாணவர்கள், மக்கள் வந்து செல்கின்றனர்.
விருதுநகர் மட்டுமல்லாது வெளி மாவட்டங்களில் இருந்தும் பள்ளி மாணவர்கள் பார்வையிடுவதற்கு இங்கு வருவர். இந்நிலையில் அகழாய்வு செல்லும் வழியில் ரோட்டை முழுமையாக சீமை கருவேல மரங்கள் மறைத்துள்ளது. இதில் டூவீலரில் வருபவர்களே தட்டுத் தடுமாறி செல்ல வேண்டி உள்ளது. பஸ் உள்ளிட்ட வாகனங்களில் வருவதில் சிரமம் ஏற்படுகிறது. இங்கு வேலைக்கு வருபவர்களும் , அதிகாரிகளும் பெரிதும் சிரமப்படுகின்றனர். எனவே இப்பகுதியில் ரோட்டை மறைத்துள்ள சீமைக் கருவேல மரங்களை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என மக்கள் எதிர்பார்க்கின்றனர்.