ADDED : ஜன 28, 2024 07:12 AM
விருதுநகர், : விருதுநகரில் தமிழ்நாடு சத்துணவு ஊழியர் சங்கத்தின் மாநில செயற்குழு கூட்டம் மாநிலத்தலைவர் சந்திரசேகரன் தலைமையில் நடந்தது. இந்த கூட்டத்தில் அரசு துவக்கப்பள்ளிகளில் வழங்கப்படும் காலை சிற்றுண்டி உணவை சத்துணவு ஊழியர்கள் மூலம் வழங்குதல் உள்ளிட்ட 3 கோரிக்கைகளை தமிழக அரசு நிறைவேற்ற வேண்டும்.
நிறைவேற்றாத பட்சத்தில் பிப். 21 முதல் பிப். 23 வரை சென்னை சேப்பாக்கத்தில் உண்ணாவிரதப்போராட்டம் நடத்தப்படும் என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இதில் மாநில பொதுச்செயலாளர் நுார்ஜஹான், பொருளாளர் சுப்புக்காளை, மாவட்டத்தலைவர் செல்வராஜ், தமிழ்நாடு அரசு ஊழியர்கள் சங்க பொதுச்செயலாளர் லட்சுமி நாராயணன் உள்பட பலர் பங்கேற்றனர்.