/உள்ளூர் செய்திகள்/விருதுநகர்/தண்ணீர் வந்தும் பலனில்லை பாசியால் பாழாகுது ஊருணிதண்ணீர் வந்தும் பலனில்லை பாசியால் பாழாகுது ஊருணி
தண்ணீர் வந்தும் பலனில்லை பாசியால் பாழாகுது ஊருணி
தண்ணீர் வந்தும் பலனில்லை பாசியால் பாழாகுது ஊருணி
தண்ணீர் வந்தும் பலனில்லை பாசியால் பாழாகுது ஊருணி
ADDED : ஜன 04, 2024 01:41 AM

விருதுநகர்: விருதுநகர் அழகாபுரி ஊருணியில் தண்ணீர் வந்து நிறைந்துள்ளது. ஆனால் எந்த பயனுக்கும் ஆகாத வகையில் ஊருணி முழுவதும் பாசி படர்ந்துள்ளன.விருதுநகர் அழகாபுரியில் ஊருக்கு நடுவில் ஊருணி அமைந்துள்ளது.
இந்த ஊருணிக்கு பல்வேறு ஓடைகள் வழியாக உறிஞ்சிக்குழிகள் அமைக்கப்பட்டு நீர் வரத்து ஏற்படுகிறது.
டிச.18ல் பெய்த அதிகனமழையில் மழைநீர் வந்து உருணி நிறைந்துள்ளது. ஆனால் வந்த வேகத்தில் பாசியும் படர்ந்து ஊருணியே பச்சை மயமாகி வருகிறது.
பாசியால் அந்த நீர் வேகமாக வற்றுவதுடன், நிலத்தடி நீருக்கும் பயன்படாமல் போக வாய்ப்புள்ளது.
ஊருணி வற்றி இருக்கும் போதே துார்வாரி சுத்தம் செய்திருந்தால் தற்போது ஊருணியில் நிறைந்துள்ள நீர் பலனை தந்திருக்கும். விருதுநகருக்குள் இதே நிலையில் பல ஊருணிகள் உள்ளன.