/உள்ளூர் செய்திகள்/விருதுநகர்/தொழில் முனைவோர் விழிப்புணர்வு கருத்தரங்குதொழில் முனைவோர் விழிப்புணர்வு கருத்தரங்கு
தொழில் முனைவோர் விழிப்புணர்வு கருத்தரங்கு
தொழில் முனைவோர் விழிப்புணர்வு கருத்தரங்கு
தொழில் முனைவோர் விழிப்புணர்வு கருத்தரங்கு
ADDED : பிப் 25, 2024 06:07 AM
விருதுநகர், : விருதுநகர் காமராஜ் பொறியியல், தொழில்நுட்பக்கல்லுாரியின் இயந்திர பொறியியல் துறை, கல்லுாரி தொழில் முனைவோர் மேம்பாட்டு மையம் இணைந்து மாணவர்களை தொழில் முனைவோராக மாற்றுவதற்கான விழிப்புணர்வு கருத்தரங்கத்தை நடத்தியது.
இந்நிகழ்ச்சியில் துறைத்தலைவர் தங்ககாசிராஜன் வரவேற்று, கல்லுாரி முதல்வர் செந்தில் துவங்கி வைத்தார். கல்லுாரி செயலாளர் தர்மராஜன் வாழ்த்துரை வழங்கினார். சிறப்பு விருந்தினராக நபார்டு வங்கி இயக்குநர் ராம ஸ்ரீனிவாசன் கலந்து கொண்டு பேசினார். இதில் பொறியாளர் நாகராஜன், கல்லுாரித்தலைவர் பெரியசாமி, துணைத்தலைவர் பாலகிருஷ்ணன், துணைச் செயலாளர் முருகன், பொருளாளர் ஸ்ரீ முருகன், பேராசிரியர்கள் உள்பட பலர் பங்கேற்றனர்.
நபார்டு வங்கி இயக்குநர் ராம ஸ்ரீனிவாசன் பேசியதாவது:
மாணவர்கள் பணிபுரிபவர்களாக இல்லாமல் மற்றவர்களுக்கு பணிகளை கொடுப்பவர்களாக மாற வேண்டும். புதிய சிந்தனைகள் வெற்றிப்பாதைக்கு அழைத்து செல்லும். அதற்கு அரசு வங்கிகள் உறுதுணையாக இருக்கும், என்றார்.