/உள்ளூர் செய்திகள்/விருதுநகர்/ குண்டாறு, தெற்காற்றில் சீமை கருவேல மரங்கள் ஆக்கிரமிப்பு குண்டாறு, தெற்காற்றில் சீமை கருவேல மரங்கள் ஆக்கிரமிப்பு
குண்டாறு, தெற்காற்றில் சீமை கருவேல மரங்கள் ஆக்கிரமிப்பு
குண்டாறு, தெற்காற்றில் சீமை கருவேல மரங்கள் ஆக்கிரமிப்பு
குண்டாறு, தெற்காற்றில் சீமை கருவேல மரங்கள் ஆக்கிரமிப்பு
ADDED : செப் 04, 2025 03:58 AM
காரியாபட்டி: காரியாபட்டி அருகே குண்டாறு, தெற்காற்றில் வளர்ந்துள்ள சீமை கருவேல மரங்களை அப்புறப்படுத்த வேண்டும் என விவசாயிகள் எதிர்பார்க்கின்றனர்.
காரியாபட்டி, திருச்சுழி பகுதிக்கு முக்கிய நீர் ஆதாரமாக இருப்பது குண்டாறு, தெற்காறு. திருமங்கலம் அருகே பிரியும் தெற்கு ஆறு காரியாபட்டி பி.புதுப்பட்டி அருகே மீண்டும் ஒன்றாக சேருகிறது.
மழை நேரங்களில் இரு ஆறுகளிலும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு பல்வேறு கண்மாய்களுக்கு வரத்து கால்வாய்கள் மூலம் நீர் செல்கிறது. நாளடைவில் ஆறுகளில் கிடந்த மணல்கள் அள்ளபட்டதால், பள்ளமாகி வரத்து கால்வாய் மேடாகின.
அத்துடன் சீமை கருவேல மரங்கள், நாணல்கள் முளைத்து ஆறு இருக்கும் இடமே தெரியாமல் உள்ளது.
மழை நேரங்களில் நீர் வரத்து இருந்தும், மழை நீர் கண்மாய்களுக்கு செல்ல வழி இல்லை. பெரும்பாலான கண்மாய்களுக்கு செல்லும் வரத்து கால்வாய்களும் தூர்வாரப்படாமல் புதர் மண்டி கிடக்கின்றன. காட்டுப்பன்றிகள் தங்கி இனப்பெருக்கம் செய்து வருகின்றன.
விவசாயிகள் ஆற்றுப்பகுதியை கடந்து சென்று வர முடியவில்லை. விவசாயம் செய்ய முடியாமல் தவிக்கின்றனர். தரிசு நிலங்களாக போட வேண்டிய சூழ்நிலை இருந்து வருகிறது.
இரு ஆறுகளிலும் பல ஆண்டுகளாக சீமை கருவேல மரங்கள் வெட்டப்படாமல் கிடப்பதால், பெருத்த மரங்களாக காணப்படுகின்றன. இதனை ஏலம் விட்டு அரசுக்கு வருவாய் ஈட்டலாம்.
ஆறு சுத்தமாகும். மழை நீரை எளிதாக சேமித்து, அனைத்து கண்மாய்களுக்கும் நீர் கொண்டு செல்ல ஏதுவாக இருக்கும்.
எனவே இரு ஆறுகளிலும் வளர்ந்துள்ள சீமை கருவேல மரங்களை அப்புறப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் எதிர்பார்க்கின்றனர்.