/உள்ளூர் செய்திகள்/விருதுநகர்/ காலநிலை மாற்றத்திற்கேற்ப சாகுபடி நுட்பங்களை மேம்படுத்தும் முயற்சி; விளைநிலங்களில் வேளாண் காடுகளை உருவாக்க அறிவுறுத்தல் காலநிலை மாற்றத்திற்கேற்ப சாகுபடி நுட்பங்களை மேம்படுத்தும் முயற்சி; விளைநிலங்களில் வேளாண் காடுகளை உருவாக்க அறிவுறுத்தல்
காலநிலை மாற்றத்திற்கேற்ப சாகுபடி நுட்பங்களை மேம்படுத்தும் முயற்சி; விளைநிலங்களில் வேளாண் காடுகளை உருவாக்க அறிவுறுத்தல்
காலநிலை மாற்றத்திற்கேற்ப சாகுபடி நுட்பங்களை மேம்படுத்தும் முயற்சி; விளைநிலங்களில் வேளாண் காடுகளை உருவாக்க அறிவுறுத்தல்
காலநிலை மாற்றத்திற்கேற்ப சாகுபடி நுட்பங்களை மேம்படுத்தும் முயற்சி; விளைநிலங்களில் வேளாண் காடுகளை உருவாக்க அறிவுறுத்தல்
ADDED : ஜன 08, 2025 06:13 AM
விருதுநகர் : விருதுநகர் மாவட்டத்தில் காலநிலை மாற்றத்திற்கேற்ப தோட்டக்கலைத்துறையின் சாகுபடி நுட்பங்களை மேம்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இதன் படி விளைநிலங்களில் மூன்றில் ஒரு பங்கு வேளாண் காடுகளை உருவாக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.
தற்போது காலநிலை மாற்றம் பெரிய அச்சுறுத்தலாக இருந்து வருகிறது. மழைக்காலங்களில் அதீத வெயிலும், காற்று வீசும் காலங்களில் அனல் காற்று வெயிலும், கோடை காலங்களில் மித மிஞ்சிய மழை காற்றும் பெய்கிறது.
இதனால் மாமரங்கள் பூக்கும் ஜனவரி, பிப்ரவரி மாதங்களில் காற்று அடிக்கும் பூக்கள் உதிர்ந்து விடுகின்றன. அதீத காற்றால் வாழை மரங்கள் சாய்ந்து விடுகின்றன. இதர பயிர்களும் சேதத்தை அனுபவிக்கின்றன. திரட்சியற்று, குறைபாடு ஏற்படும் சூழல் உள்ளது.
இந்நிலையில் இதை கட்டுப்படுத்த தோட்டக்கலைத்துறை பல்வேறு தொழில்நுட்பங்களை மேம்படுத்த முயற்சி எடுத்து வருகிறது.
அதன்படி பருவநிலைக்கு ஏற்ற பல்லுயிர் சாகுபடி தொழில் நுட்பங்கள் அறிவிக்கப்பட்டது.
நித்திய கல்யாணி, கொடுக்காப்புளி, அவுரி, அத்தி, சீத்தா போன்ற வகைகளை சாகுபடி செய்ய அறிவுறுத்தப்பட்டுள்ளது.
நிலத்தடி நீர் பற்றாக்குறையை சரி செய்ய சொட்டுநீர் பாசனம் அமைக்க வேண்டும்.
இயற்கை உரங்களை அதிகப்படுத்தி மண் சத்துக்களை அதிகப்படுத்த வேண்டும் என அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.
தோட்டக்கலை துணைஇயக்குனர் சுபா வாசுகி கூறியதாவது: காலநிலை மாற்றத்தை சமாளிக்கவீரிய தாங்கு திறன் கொண்ட ரகங்களை நடவு செய்ய வேண்டும்.
விளைநிலத்தில் மூன்றில் ஒரு பங்கு வேளாண் காடுகள் வளர்க்க வேண்டும்.
சவுக்கு, தேக்கு, ரோஸ்வுட் போன்ற மரங்களை வளர்ப்பதன் மூலம் விளைநிலத்தில் இதமான சூழலை தொடர்ந்து நிர்வகிக்க முடியும்.
நித்திய கல்யாணி எக்டேருக்கு ரூ.12 ஆயிரம், டிராகன் பழத்திற்கு ரூ.96 ஆயிரம், அத்தி பழத்திற்கு ரூ.14 ஆயிரத்து 400 என பல்வேறு பயிர்களுக்கு மானியம் வழங்கப்படுகிறது.
இதை பயன்படுத்தி விளைநிலங்களை மேம்படுத்தி மண்ணை மேம்படுத்துவது காலநிலை மாற்றத்தை சமாளிக்க உதவும்.ஒருங்கிணைந்த நோய், பூச்சி, உர மேலாண்மை செய்வதால் சாகுபடி சீராக்கப்படுகிறது, என்றார்.