/உள்ளூர் செய்திகள்/விருதுநகர்/ விவசாய நிலத்திற்கு செல்லும் பாதை சேதம் விவசாய நிலத்திற்கு செல்லும் பாதை சேதம்
விவசாய நிலத்திற்கு செல்லும் பாதை சேதம்
விவசாய நிலத்திற்கு செல்லும் பாதை சேதம்
விவசாய நிலத்திற்கு செல்லும் பாதை சேதம்
ADDED : ஜன 08, 2025 06:12 AM
ராஜபாளையம் : ராஜபாளையம் புதுக்குளம் கண்மாய் விவசாயிகள் விவசாய விளைப் பொருட்களை கொண்டு செல்லும் பாதையை சீரமைத்து தரவேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.
ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலையில் உருவாகும் அய்யனார் கோயில் ஆற்றின் நீர்வரத்து பெறும் முதல் கண்மாயாக முடங்கியாறு ரோட்டின் அருகே புதுக்குளம் கண்மாய் அமைந்துள்ளது.
சுமார் 200 ஏக்கர் பாசன வசதி உள்ள இக் கண்மாய் நிறைந்து பிரண்டை குளம், புளியங்குளம், கொண்டநேரி உள்ளிட்ட நகரை ஒட்டிய கண்மாய்களும் தொடர்ச்சியாக நீர்வரத்து பெற்று வருகின்றன.
இந்நிலையில் கண்மாய் கரை வழியாக இரண்டு கிலோ மீட்டர் தூரம் உள்ள விளை நிலங்களுக்கு செல்லும் பாதை முறையாக வசதி செய்யப்படவில்லை.
கரடு முரடாகவும் உரம், விளை பொருட்கள், இடுபொருட்கள் கொண்டு செல்ல டிராக்டர் உள்ளிட்ட வாகனங்கள் வந்து செல்லவும் சிரமம் ஏற்பட்டு வருகிறது.
அகலம் குறைவாக உள்ளதால் மழைக்காலங்களில் சகதியில் சிக்கி விவசாயிகள் சிரமத்திற்கு உள்ளாகின்றனர்.
இது குறித்து பாசன சங்க விவசாயிகள் தலைவர் முருகன்: ஏற்கனவே தனியார் சர்க்கரை ஆலை மூலம் அமைக்கப்பட்டிருந்த பாதையை கண்மாய் கரை அகலப்படுத்தும் பணியின் போது சேதமாக்கிவிட்டனர்.
இதுவரை பாதையை சீரமைத்து தரவில்லை. விவசாயிகள் தேவை கருதி தார் சாலை அமைத்து தர பொதுப்பணித்துறையினரிடம் கோரிக்கை விடுக்கிறோம்.