/உள்ளூர் செய்திகள்/விருதுநகர்/செயல்படாத சுகாதாரவளாகம், ரோடு காணாத தெருக்கள்செயல்படாத சுகாதாரவளாகம், ரோடு காணாத தெருக்கள்
செயல்படாத சுகாதாரவளாகம், ரோடு காணாத தெருக்கள்
செயல்படாத சுகாதாரவளாகம், ரோடு காணாத தெருக்கள்
செயல்படாத சுகாதாரவளாகம், ரோடு காணாத தெருக்கள்
ADDED : பிப் 06, 2024 12:17 AM

சிவகாசி : தெருவில் 20 ஆண்டுகளாக ரோடு இல்லை, சுகாதார வளாகம் செயல்படவில்லை, வாறுகால் துார்வார வில்லை என திருத்தங்கல் திருப்பதி நகர் பகுதி மக்கள் எண்ணற்ற பிரச்னைகளில் சிக்கி தவிக்கின்றனர்.
திருத்தங்கல் திருப்பதி நகரில் 20 ஆண்டுகளாக தெருவில் ரோடு இல்லாதது, சுகாதார வளாகம் செயல்படாதது முக்கிய பிரச்னையாக உள்ளது. திருப்பதி நகரில் 200 க்கும் மேற்பட்ட குடியிருப்புகள் உள்ளன.
ஆனால் இங்கு இதுநாள் வரை தெருவில் ரோடு அமைக்கப்படவில்லை. தெரு முழுவதும் குண்டும் குழியுமாக காணப்படுகிறது. வாறுகால் வசதியும் இல்லாததால் கழிவுநீர் தெருவில் ஓடுகின்றது.
மழைக்காலங்களில் தண்ணீர் வீடுகளுக்குள் புகுந்து விடுகின்றது. இங்கு ஒரு தெருவில் புதிதாக வாறுகால் கட்டப்பட்டும் அதனை அடைத்து விட்டதால் கழிவுநீர் வெளியேற வழி இல்லை. இதனால் குடியிருப்புவாசிகள் பெரும் அவதிக்குள்ளாகின்றனர். அதிக அளவிலான தெரு நாய்கள் நடமாடி மக்களை சிரமப் படுத்துகிறது.
சுகாதார வளாகம் பயன்பாட்டிற்கு வருமா
அழகேஸ்வரி, குடும்பத் தலைவி, இப்பகுதியில் 2008 ல் சுகாதார வளாகம் கட்டப்பட்டது. சில வாரங்கள் மட்டுமே பயன்பாட்டில் இருந்த இந்த சுகாதார வளாகம் தற்போது வீணாக காட்சியளிக்கிறது. மேலும் சுகாதார வளாகம் செல்வதற்கும் பாதை இல்லை. எனவே உடனடியாக சுகாதார வளாகத்தை பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும்.
புதிய வாறுகால் அமைக்கப்படுமா
பவுன் பாண்டி, டிரைவர், திருப்பதி நகரில் நுழைவுப் பகுதியில் வாறுகால் அமைக்கப்பட்டு 20 ஆண்டுகளுக்கு மேல் ஆன நிலையில் தற்போது ஆங்காங்கே சேதமடைந்துள்ளது. கழிவுநீர் ஒரே இடத்தில் தேங்கி துர்நாற்றத்தை ஏற்படுத்துவதோடு சுகாதார கேட்டினையும் ஏற்படுத்துகிறது.
ரோடு வசதி இல்லை
முத்துலட்சுமி, குடும்பத் தலைவி, தெருவில் ரோடு வசதி இல்லாததால் மழைக்காலங்களில் தண்ணீர் தேங்கி போக்குவரத்திற்கு சிரமம் ஏற்படுகிறது.
டூவீலரைக் கூட வீட்டிற்கு அருகே கொண்டு வர முடியாமல் பக்கத்து தெருவில் நிறுத்த வேண்டி உள்ளது. கொசு தொல்லையால் மிகவும் அவதிப்பட நேரிடுகிறது. எனவே இப்பகுதியில் ரோடு, வாறுகால் வசதி ஏற்படுத்த வேண்டும்.
திருப்பதி, வார்டு கவுன்சிலர், சுகாதார வளாகத்தில் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு பயன்பாட்டிற்கு கொண்டு வரப்படும். ரோடு, வாறுகால் அமைப்பதற்கு மாநகராட்சியில் தெரிவிக்கப்பட்டுள்ளது. விரைவில் ரோடு போடப்படும்.