/உள்ளூர் செய்திகள்/விருதுநகர்/நாளுக்கு நாள் அதிகரிக்கும் நாய்கள் தொல்லைநாளுக்கு நாள் அதிகரிக்கும் நாய்கள் தொல்லை
நாளுக்கு நாள் அதிகரிக்கும் நாய்கள் தொல்லை
நாளுக்கு நாள் அதிகரிக்கும் நாய்கள் தொல்லை
நாளுக்கு நாள் அதிகரிக்கும் நாய்கள் தொல்லை
ADDED : ஜன 31, 2024 12:05 AM
அருப்புக்கோட்டை : தினம் தினம் தெரு நாய்கள் மக்களை கடிப்பது அதிகரித்து வருவதாக அருப்புக்கோட்டை நகராட்சி கூட்டத்தில் கவுன்சிலர்கள் குற்றம் சாட்டினர். அருப்புக்கோட்டை நகராட்சி கூட்டம் தலைவர் சுந்தரலட்சுமி தலைமையில் நடந்தது.
கமிஷனர் அசோக்குமார், துணைத் தலைவர் பழனிச்சாமி, கவுன்சிலர்கள், அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
கூட்டத்தில் நடந்த விவாதங்கள்
பாலசுப்பிரமணியன், (மார்க்சிஸ்ட்): நகராட்சி குடிநீர் தொடர்ந்து செம்மண் கலரில் வருகிறது. நான் பலமுறை இது குறித்து கூறியும் நடவடிக்கை இல்லை. சுத்தமான குடிநீர் வழங்க நடவடிக்கை எடுங்கள்.
பழனிச்சாமி, துணை தலைவர்: வெள்ளப்பெருக்கிற்கு பின் தாமிரபரணி ஆற்றில் இருந்து இப்பொழுது தான் குடிநீர் வருகிறது. ஆங்காங்கு குழாய்களில் உடைப்பு ஏற்பட்டு சரி செய்யப்பட்ட பின் குடிநீர் வருவதால் அதில் செம்மண் கலந்து வருகிறது. தண்ணீர் வந்து சிறிது நேரம் கழித்து பிடித்தால் நன்றாக இருக்கும்.
முருகானந்தம், (பா.ஜ.): நகரில் நாய்கள் தொல்லை தாங்க முடியவில்லை. தொடர்ந்து இது குறித்து கூட்டத்தில் பேசி வருகிறேன். எனது வார்டில் உள்ள தெருவில் வீட்டிற்குள் இருந்த ஒருவரை தெரு நாய்கள் கடித்து அவர் தையல் போட்டுள்ளார். பொதுமக்களை நாய்கள் விரட்டி கடிக்கின்றன. கட்டுப்படுத்த என்ன நடவடிக்கை எடுத்துள்ளீர்கள்.
செந்திவேல், (திமுக): நேதாஜி தெருவில் குடிநீர் பகிர்மான குழாய் பதிப்பதற்காக 2 பக்கமும் தோண்டி போட்டுள்ளனர். மக்கள் நடந்து செல்ல சிரமப்படுகின்றனர். விரைவில் சரி செய்யுங்கள்.
கண்ணன், (திமுக): நகரில் ஆக்கிரமிப்புகளை எப்போது எடுப்பீர்கள்.
மீனாட்சி, (திமுக): வார்டில் செய்ய வேண்டிய பணிகள் குறித்து பேச அதிகாரிகளை அலைபேசியில் அழைத்தால் எடுப்பதில்லை. குறைகளை யாரிடம் சொல்வது.
டுவிங்கிளின் ஞான பிரபா, (திமுக): கலைஞர் நகர் 5 தெருவில் ரோடு, வாறுகால் இன்றி மக்கள் சிரமப்படுகின்றனர். தற்காலிமாக ஏதாவது செய்யுங்கள்.
இளங்கோ, (திமுக): நாய்கள் பிரச்சனை அளவுக்கு மீறி உள்ளது. மக்கள் மத்தியில் அச்சம் ஏற்பட்டு உள்ளது. எங்களால் பொது மக்களுக்கு பதில் கூறி சமாளிக்க முடியவில்லை. நகராட்சி தான் நாளிதழ்கள் மூலம் பொது மக்களுக்கு அறிவுறுத்த வேண்டும்.
சிவப்பிரகாசம், (திமுக): நாய்கள் பிடிப்பதில் பல சட்ட திட்டங்கள் இருப்பதால் அதிகாரிகள் யோசனை கேட்டு செய்ய வேண்டியுள்ளது, விரைவில் நகரில் நாய்களை முறையான சட்டத்திற்குட்பட்டு கட்டுப்படுத்துங்கள்.
இவ்வாறு விவாதம் நடந்தது.- -